விளையாட்டை நேர்மையாக விளையாட உதவுகிறோம்!





Image result for alan brailsford, uk anti doping lab


மினி பேட்டி!


ஆலன் பிரெய்ல்ஸ்போர்டு, ஆய்வக இயக்குநர் இங்கிலாந்து

விளையாட்டு வீரர்களை எப்படி சோதிக்கிறீர்கள்?

கோடைக்காலத்தில் எங்களுக்கு வரும் மாதிரிகள் குறைவு. ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது தினசரி 250 மாதிரிகளைச் சோதிப்போம். கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் மாதிரிகளை சோதித்தோம். ரத்தம், சிறுநீர் ஆகிய மாதிரிகளின் மூலம் சோதனைகள் செய்கிறோம். இன்று பெரும்பாலும் சிறுநீர் மாதிரிகள் அதிகம் வருகின்றன.

இதில் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீர்கள்?

சோதனைகளை சரியாக செய்வதற்கான நேரம்தான். வேறென்ன? போட்டிகளில் பங்கேற்றும் வீர ர்களை சரியான முறையில் சோதிக்க நிறைய நேரம் தேவை. அப்போதுதான், ஏமாற்றும் வீரர்களை சரியான முறையில் கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் செய்கிற இந்த பணியால் விளையாட்டி கவனிக்கிற ஆர்வத்தை இழந்து விட்டீர்களாழ

நான் விளையாட்டு வீரன் அல்ல. என்னுடைய பணி ஆய்வு செய்வதுதான். நான் இதில் மோசடி செய்யும் வீர ர்களை அடையாளம் காட்டி வருகிறேன். விளையாட்டை விதிமுறைகளுக்குட்பட்ட விளையாட்டாக இருக்க உதவுகிறோம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.


நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்


 


பிரபலமான இடுகைகள்