காகிதங்கள் மஞ்சள் நிறமாவது ஏன்? - மரத்தில் உள்ளது காரணம்!
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
நாட்பட காகிதம் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
நடிகைகளின் புளோஅப் புகைப்படத்தை வைத்து என் நண்பன் சித்தாந்த ரத்னம் செந்தில், செய்யும் வேலைகளில் அதில் வெள்ளை நிறம் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் மஞ்சள் நிறம் ஏற்படுவது ஏன்? கண்டுபிடிச்சாச்சு. அதில் லிக்னைன் எனும் பொருள் உள்ளது. எகனாமிக் டைம்ஸ் பேப்பரை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கினாலும், இந்திராகாந்தி காலத்து பேப்பர் போல மஞ்சளாக,சிவப்பாக இருக்கும். காரணம் அதிலுள்ள லிக்னைன் எனும் இந்த வேதிப்பொருள்தான்.
மரத்தின் வலுவை அதிகமாக்குகிற பொருள்தான் லிக்னைன். ஆனால், அது காற்றுடன் வினைபுரிந்து காகித த்தை மஞ்சளாக்குகிறது. தரமான ஜிஎஸ்எம் தாள் ப்ளீச் செய்யப்பட்டு உருவானால் சிறிது நாட்கள் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் மரத்தில் செய்யப்பட்ட காகித தாள்கள் அனைத்தும் மஞ்சள் ஆவதைத் தடுக்க முடியாது.
நன்றி: பிபிசி