பேஸ்கட் பால் விளையாட்டில் சாதித்த ஓரினச்சேர்க்கையாளர்! - மைக்கேல் சாம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள்
மைக்கேல் சாம்
மைக்கேல் ஆலன் சாம் ஜூனியர், அமெரிக்காவில் பேஸ்கட்பால் விளையாட்டு வீரர். மிசௌரி பல்கலைக்கழ கல்லூரியில் படித்து வந்தார். என்எஃப்எல்லில் இடம்பெறுவது பல விளையாட்டு வீர ர்களுக்கும் கனவு. இவருக்கு இடம் கிடைத்தது. அதுவும் இவர் தன் கல்லூரி படிப்பை முடித்தபிறகு, தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துவிட்டார். அப்போதும் பேஸ்கட் பால் அணியில் விளையாடும் பேஸ்கட்பால் அணி நிர்வாகம் வழங்கியது ஆச்சரியமான ஒன்று.
அமெரிக்காவில் சாம் அப்படி தன்னை வெளிப்படுத்தியபோது, பேஸ்கட்பால் விளையாட்டில், ஓரினச்சேர்க்கையாளர் யாரும் கிடையாது. நிலைமை எப்படி அழுத்தமாக இருந்ததோ தெரியவில்லை. ஆனால் சாம் விளையாடுவதை மட்டுமே தனக்கான அழுத்தமாக ஊக்கமாக கருதினார்.
இதுபற்றிய சர்ச்சை எழுந்தபோது, அமெரிக்க அரசு பாலினத்தை கேட்கவும் வேண்டாம் யாரும் சொல்லவும் வேண்டாம் என்று கூறி மாற்றுப்பாலினப் பிரச்னையை தீர்த்து வைத்தது. ”மாற்றுப்பாலினத்தவர்கள், அல்லது கருப்பினத்தவர்கள் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக என் அடையாளத்தை நான் வெளிப்படுத்தவில்லை. நான் உங்களைப்போல இயல்பான வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்பினேன். என் பாலின அடையாளத்தை ஈஎஸ்பின் டிவியிடம் கூறவில்லை. என்னுடன் விளையாடும் வீரர்களிடம்தான் கூறினேன்.’’ என்கிறார் சாம்.
தொண்ணூறுகளில் பிறந்த சாம், அவரது குடும்பத்தில் பிறந்த எட்டுபேரில் ஏழாவது நபர். இவருக்கு பெரியளவு குடும்பம் உதவில்லை. சிறுவயதில் வீடு என்பது அம்மாவின் கார்தான். காரணம் இவர் பிறந்த சில ஆண்டுகளில் இவரது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். இதன்விளைவாக, பள்ளியில் நண்பர்களின் உதவியுடன் அவர்களது வீடுகளில் தங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரி வரை படித்தவர் சாம் மட்டும்தான். 2013 ஆம் ஆண்டு சாமின் பாலியல் அடையாளம் வெளியே தெரிய வந்துவிட்டது. பின்னரும் அரசு மற்றும் பேஸ்கட்பால் அமைப்புகள் அவரை ஆதரித்து விளையாட அனுமதித்தன.
நன்றி: அவுட்.காம்.
தமிழில்: வின்சென்ட் காபோ