சாப்பிட்டபிறகு உடனே குளித்தால் ஆபத்தா? - மிஸ்டர் ரோனி





Image result for bathing





ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி

சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்தபிறகு குளிக்க வேண்டுமா?

நாம் அப்படி நினைத்து வருகிறோம். ஆனால் அது தேவையில்லை என்று பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் கூறி வருகின்றன. 1960ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், இதுபற்றிய நமது கருத்து தவறு என்று கூறியது.

இக்காலகட்டத்தில் நீச்சல் வீரர்களுக்கு பல்வேறு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன்மூலம், அவர்களின் உடல்நலனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று ஆராய்ந்தனர். ஆனால் உடல்நலன் பாதிப்பிற்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிரூபணமானது. 2005, 2011 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும் இதனை நிரூபித்தன. எனவே சாப்பிட்டபிறகு ஒரு மணிநேரம் காத்திருந்து குளிக்க வேண்டியதிலை. அதற்கு முன்பே குளித்துவிட்டு சாப்பிடுங்கள். மேற்சொன்ன ஆராய்ச்சிகளைப் படிக்க வேண்டிய தொல்லை மிச்சம் பாருங்கள்.

நன்றி: பிபிசி





பிரபலமான இடுகைகள்