சினிமாவில் சாதித்த மாற்றுப்பாலின பெண்கள்! - வாசோவ்ஸ்கிஸ்!




Image result for Lily and Lana Wachowski





மாற்றுப் பாலின சாதனையாளர்கள்

லில்லி - லானா வாசோவ்ஸ்கி

21 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற திரைப்பட பெண் இயக்குநர்கள். எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை  கொண்டவர்களாக இருந்தனர். தி மேட்ரிக்ஸ், வி ஃபார் வென்டெட்டா, க்ளவுட் அட்லஸ்,  சென்ஸ் எய்ட் என இவர்கள் உருவாக்கிய படைப்புகள் இவர்களை யார் என கேட்க வைத்தன.

அமெரிக்காவில் பிறந்த இரு பெண்கள்தான் தி மேட்ரிக்ஸ் என்ற திரைப்பட இயக்குநர்கள் என்றால் நம்புவீர்களா? கிராபிக் நாவல், காமிக்ஸ் ஆகியவற்றிலிருந்து ஊக்கம் பெற்று படங்களை உருவாக்கினர்; உருவாக்கி வருகின்றனர். வாசோவ்ஸ்கி சகோதரிகள் என்ற  பெயரில் அழைக்கப்படுகின்றனர். மாற்றுப் பாலினத்தவராக தம்மை அழைத்துக் கொண்ட பெண்கள் இவர்கள். தற்போது நெட்பிளிக்சில் சென்ஸ் 8 என்ற தொடரை உருவாக்கி வருகின்றனர். இத்தொடர் மாற்றுப்பாலினத்தவர் சார்ந்த கதை.

ஆங்கில கவிஞர் எழுத்தாளரான ரொனால்டு டோல்க்கியனின் தாக்கம் பெற்றவர்கள் இவர்கள். இவர்தான் ஹாபிட், லார்டு ஆப் தி ரிங்க்ஸ் ஆகிய கதைகளை எழுதியவர். நாங்கள் சினிமாவை புரிந்துகொள்ளக்கூடியதாக கணிக்க கூடியதாக உருவாக்குவதில்லை. அதனை முழுமை அடைந்த படமாக எடுக்க நினைக்கிறோம். அனிமேஷன், காமிக்ஸ் படித்து நாங்கள் சினிமாவுக்கு வந்தவர்கள். எனவேதான் நாங்கள் இணையத்தில் நீக்கப்பட்ட காட்சிகளைக் கூட வெளியிடுவதில்லை என்கிறார்கள்.

தங்களது சினிமாவில் மாற்றுப்பாலினத்தவரை எப்படி காட்டுகிறார்கள் என்பது விரைவில் பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும். அந்த வகையில்  திரைப்பட வடிவில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நன்றி: அவுட்.காம்

தமிழில்: வின்சென்ட் காபோ