மோடியின் இந்தியா எப்படியிருக்கவேண்டும்? - சேட்டன் பகத்





Image result for modi illustration





மோடி என்ன செய்யவேண்டும்? - சேட்டன் பகத்

மோடி, 2014 ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்கள், எதிர்கட்சிகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டிவிட்டார் . இனி அவர் எதிர்பார்ப்பது, பயணிப்பது 2024 ஆம் ஆண்டு  நோக்கித்தான். ஏறத்தாழ அவரின் பயணம் தடங்கலற்று அவரே ஏற்படுத்திக்கொண்ட பாதையில் வேகமாக சென்று வருகிறது. அவர் ஆட்சிக்கு வந்தபோது சேட்டன் பகத் சில விஷயங்களை பரிந்துரைத்தார்.

வெளிநாட்டு இந்தியர்களுடன் பாஜக அரசுக்கு நல்லுறவு இருக்கிறது. அதன்மூலம் இந்தியா வளமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை உருவாக்க முயலலாம்.

மன் கீ பாத்  - மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் ஒருவழிப்பாதையாக அமையக்கூடாது. மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை அறிவது அவசியம். இதுவே ஜனநாயகப்பாதையில் பாஜகவை நடக்க வைக்கும்.

பாஜக வெற்றியடையும் அதே நேரத்தில் கட்சிக்குள்ளிருந்து இந்து மத வெறிக் கருத்துகளைக்  கேட்கிறோம். பாஜக, இந்துக்களை பெரும்பான்மைப்படுத்தினாலும் மோடிக்கு வாக்களித்தது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். இதனை  அனைத்து மக்களுமே செய்தனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

 இந்நிலையில், குறிப்பிட்ட இன வெறுப்பு, மத துவேஷ கருத்துகள் நீக்கப்படுவதும் அவசியம். இல்லையெனில் இந்தியா, பாகிஸ்தான் போல இந்துஸ்தானாக மாறுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகிவிடும்.

பொது நிகழ்ச்சிகளில் அதிகாரப்பூர்வமாக மோடி தொழிலதிபர்களுடன் இருப்பது சரிதான். ஆனால் அதற்காக, தொழிலதிபர்களுடன் விருந்து, தேநீர் என புகைப்படம் எடுத்து வெளியிடுவது சரியல்ல.

இந்தியாவில் இன்றும் சேரிப்பகுதி உள்ளது. நடைபாதையில் உறங்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கான குறைந்தவிலை வீடுகளை வழங்குவது முக்கியம்.
அரசு முறை பயணம், தலைவர்கள் சந்திப்பு என்றே இருக்கவேண்டியதில்லை. எளிய உணவுகளைச் சாப்பிடுவது, விளையாட்டில் ஈடுபடுவது என பிரதமர் இருக்கலாம். அது பிரதமரின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

சிலைகள் வைப்பது பெரும்பாலான தலைவர்கள் செய்யும் விரயவேலை. பள்ளிகள், மருத்துவமனைகள் தான் நமக்குத் தேவையே ஒழிய விண்ணுயர நிற்கும் சிலைகள் அல்ல.

மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நிறைய பள்ளிகளைத் தொடங்க வேண்டும். இவையன்றி, இந்தியா அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் பொருளாதாரத்தோடு போட்டி போட வாய்ப்பு இல்லை.
இவையெல்லாம் நிறைவேற்றப்பட முடியாதவை அல்ல. மனமிருந்தால் மார்க்கமுண்டு. இந்திய அரசு இவற்றைப் பின்பற்றினாலே இந்தியா பொருளாதார வளர்ச்சியோடு கலாசாரத்திலும் முன்னோடியாக வளரும்.

-----
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் என்று நூலைத் தழுவியது


பிரபலமான இடுகைகள்