தடுப்பூசியால் அழிந்த நோய்கள் இவைதான்!
தடுப்பூசியால் ஒழிந்த நோய்கள்!
பெரியம்மை. இந்நோய் பாதிப்பினால் உலகிலுள்ள 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இறந்தனர். எட்வர்டு ஜென்னர் கண்டுபிடித்த பெரியம்மைத் தடுப்பூசி, பல லட்சம் மக்களைக் காப்பாற்றியது.
தொண்டை அழற்சி நோய்
இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மக்களைக் கொன்ற நோய் இது. தடுப்பூசி கண்டறியப்பட்டபின் 86 சதவீதம் கட்டுக்குள் வந்தது.
கக்குவான் இருமல்
பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை பரலோக பாஸ்போர்ட் இன்றி அனுப்பி வைத்த நோய். தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தட்டம்மை
கண்பார்வை இழப்பு, நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும் தட்டம்மை ஒழிக்கப்பட்டதில் தடுப்பூசிகளின் பங்கு அதிகம். இதன்மூலம், 30 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
டெட்டனஸ்
பிறந்த குழந்தைகளை தாக்கும் நோய் இது. இதன்மூலம் 7 லட்சம் குழந்தைகளின் இறப்பு ஒரே ஆண்டில் குறைந்திருக்கிறது.
நன்றி- ஹவ் இட் வொர்க்ஸ்