ராபர்ட் முகாபே - ஜனநாயகவாதியின் தவறுகள்!
ஜிம்பாவே நாட்டின் முன்னால் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமாகியுள்ளார். 37 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர், மக்களில் வாழ்விலும் கொடுமையான ஆட்சியின் அடிச்சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு கலகம் தொடங்கியது. இதனால் பதவியிழந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார்.
இவரை விடுதலையின் அடையாளம் என்று அதிபர் எமர்சன் நங்காவா கூறியுள்ளார். பலரும் முகாபேயை சர்வாதிகார அதிபராகவும், நாட்டை நசித்த தலைவராகவும்தான் அடையாளம் காண்கிறார்கள். புதிய அலை எழுந்து அல்ஜீரியா முதல் சூடான் வரை முகாபே போன்ற தலைவர்களை பதவியிழக்கச் செய்த து சுவாரசியமான ஆய்வாகவே இருக்கும்.
ஜிம்பாவே ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் எனும் கட்சியை தலைமை தாங்கியவர் முகாபே. செய்த போராட்டத்தால், பத்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த தண்டனை முடிந்தபோது மக்கள் அவரை நாயகனாகவே நினைத்து பேசினர். புகழ்ந்தனர். 1980 ஆம் ஆண்டு புத்திசாலி நாயகனாக இவரையே தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. முகாபே , கருப்பினத்தவர்களுக்கான கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். திட்டங்களை அறிவித்தார். ஆனால் ஆட்சி நம்முடையதுதான் என்று தைரியம் வந்ததும் முகாபே ஆடிய ஆட்டம், அவரை நம்பிய மக்களையே பலிகொண்டது. 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முகாபே வட கொரிய படை கொண்டு தன்னை எதிர்த்த அரசியல் கட்சிகள், புரட்சிப்படைகள் என அனைவரையும் தீவிரமாக ஒடுக்கத் தொடங்கினார். வன்முறையை எப்படி நம்பினாரோ, அவரது முந்தைய ஆட்சியாளர்களின் பாதையைப் பின்பற்றி ஆளத் தொடங்கினார் முகாபே.
2000 ஆம் ஆண்டு வெள்ளையர்களின் பண்ணைகளை வாங்கி நிலச்சீர்திருத்தத்தை அமல் செய்தார். அதோடு ஜிம்பாவே நாட்டின் கருவூலமே காலியானது. அதனால் முழுக்க வெளிநாடுகள் அளிக்கும் நிதியை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு ஆளானது நாடு. இந்தியா, ரஷ்யா நாடுகள் ஜிம்பாவே நாட்டுடனான உறவை முகாபே மறைவின்போது நினைவுகூர்ந்துள்ளன. ஆனால் மேற்கத்திய நாடுகள் ஜிம்பாவேயை ஒழித்துக்கட்டியவர் முகாபே என விமர்சித்துள்ளன. குறிப்பாக, இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் இதனை வெளிப்படையாக கூறிவிட்டார்.
முகாபேவை அடுத்து அல்ஜீரிய அதிப் அப்டெல்அசிஸ் பௌடிஃபிலிகா , சூடானின் ஓமர் அல் பஷீர் ஆகியோருக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிப் அப்டெல் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். இனியும் மக்களைச் சுரண்டி கொழுக்கும் அதிபர்கள் ஆப்பிரிக்க நாடுகளை ஆள்வது சிரமம் என்ற செய்தியை மக்கள் போராட்டங்கள் கூறுகின்றன.
நன்றி: Ozy