மரணக்குகையில் வைரக்குவளை ஆபத்து!





The Phantom...Sy Barry


வேதாளர் அல்லது மாயாவி அசத்தும்

மரணக்குகை

The 👻






ஆக்சன்களே இல்லாத வேதாளரின் கதை. ரெக்ஸ், டாம் என்ற இரு சிறுவர்களுக்கு வேதாளர் தன் குகையிலுள்ள பொருட்களைப் பற்றி விளக்கிச் சொல்கிறார். அப்போது அங்கு, முன்னரே வந்திருந்த பேராசிரியர் வைர குவளை பற்றி தகவலை ஒருவருக்கு கூறுகிறார். எதற்கு? தன் அறிவை நிரூபிக்க. இதனைக் கேட்கும் ஒருவர், பேராசிரியர் மூலமாக அந்த வைர கோப்பையை அபகரிக்க திட்டம் போடுகிறார். 

லூசு பேராசிரியர் தன் அறிவை மற்றவர்கள் ஏற்க எதையும் செய்யத் தயாராகிறார். அப்போதுதான் எதற்கு வைரக்குவளை என்று கேட்க விற்கத்தான் என்ற திருடர் சொல்ல, அய்யய்யோ நான் சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டீங்கன்னு நினைச்சேன் என எஸ்கேப் ஆக நினைக்கிறார். திருடர் கொன்றுவிடுவதாக சொல்ல, பீதியாகிறார் பேராசிரியர். 

அப்புறம் என்ன காட்டுக்கு பேராசிரியர் செல்லவும், அவரை பின்தொடர்ந்து திருடர் போகிறார். வேதாளர் இருவரையும் குமட்டில் குத்தி கொல்லாமல் , குகை முழுக்க சுற்றிக்காட்டுகிறார். ஆவ்... என கொட்டாவி விடக்கூடாது. 

பின் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருடர் வேதாளரையே மிரட்டுகிறார். வேதாளர் ஏதாவது சண்டை போட்டு திருடரை அடிப்பார், உதைப்பார் என்று பார்த்தால் அவரும் திருடரை விட்டுவிடுகிறார். அவர் நான் உன்னிடம்  இருந்து கோப்பையைக் கைப்பற்றுவேன் என சவால் விட்டு செல்வதே கதை. 


வேதாளருக்கு வேலையே இல்லையா? எதற்கு கண்டவர்களுக்கு குகையைச் சுற்றிக்காட்டவேண்டும், அவர்கள் அதனை திருடவேண்டும் என கேள்விகேட்டால் மண்டையோட்டு முத்திரை நமது கடைவாயில் வந்துவிடும். 

இதையும் கதை என ராணிமுத்து போட்டு விற்றிருக்கிறது என்று நினைத்தாலே வயிறு எரிகிறது. சண்டைக்காட்சிகளே இல்லாத தூர்தர்ஷனில் போடும் படம் யூ சர்டிபிகேட் காமிக்ஸ் இது. 

நன்றி: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழு

படம்: பின்டிரெஸ்ட்