அறையைத் துடைக்கும் ஐரோபட்!



டெக் புதுசு!




Shadow Ghost






Shadow Ghost


உலகமே இணையம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்று கேபிள், டிடிஹெச்சை விட இணையம் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு ஸ்மார்ட் டிவிக்கள் நம்மை மாற்றி விட்டன. ஷாடோ கோஸ்ட் அந்தவகையைச் சேர்ந்த சேவைதான். அமேசான், நெட்பிளிக்ஸ் சேவையில் படம், சீரியல்களைப் பார்ப்பது போல இதில் நீங்கள் விளையாட்டுகளை இணையத்திலேயே விளையாடி மகிழலாம். 


இதில் 12 ஜிபி ராம், என்விடியா கிராபிக்ஸ் கார்டு, 3.2 ஜிகாஹெர்ட்ஸ் புராசசர்  ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. எனவே தயங்காமல் வாங்கி கொண்டாடலாம். ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றில் இணைத்துக்கொள்ளலாம். நல்ல இன்டர்நெட் வசதி இருந்தால் இதனை தயங்காமல் வாங்கலாம். 



iRobot Braava jet 240



அனைத்தும் மெஷினாகிற உலகம். இங்கு போய் காமன்சென்ஸ் இல்லாமல் ஏய் ரமணம்மா என்ன வேலை பார்த்திருக்க, தரையை ஒழுங்கா துடைக்க தெரியலையே உனக்கு என கம்ப்ளைண்ட் பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா சொல்லுங்கள். 

அதற்காகத்தான் ஐரோபட் பிராவா. 


உங்கள் வீட்டில் பளிச் பளிங்கு தரையை நறுவிசாக துடைத்து பளீரிட வைக்கும் ரோபட். போன் மூலமே இயக்க முடியும். ஆப் மூலமும் இயக்கிப் பயன்படுத்தலாம். அறையின் கார்னரில் கொண்டுபோய் வைத்துவிட்டு போனில் க்ளீன் பட்டன் அழுத்தினால் விறுவிறுவென வேலைபார்க்கிறான் பிராவா. ரோபோ உங்கள் தரையைத் துடைக்கிறது என்ற பெருமை ஊருக்குள் அந்தஸ்தை உயர்த்தப்போகிறது பாருங்கள்.


நன்றி:பிபிசி