புளோரிடாவை நடுங்க வைத்த காதல் சைக்கோ - டெட் பண்டி





Image result for ted bundy

டெட் பண்டி - காதலைக் கொன்றேன்!


அமெரிக்காவில் வெர்மாண்ட்டில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று பிறந்தார் டெட் பண்டி. இப்படித்தான் போலீஸ் கூறுகிறது. இயற்பெயர் தியோடர் ராபர்ட் கோவெல். அம்மா, தங்கையுடன் வசித்த சிறுவன் தன் தந்தையைப் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம், திருமண உறவில் பிறக்கும் அதிர்ஷ்டம் டெட் பண்டிக்கு இல்லை, அவரின் சகோதரிக்கும் இல்லை. இப்படியொரு பெண்ணை வீட்டில் வைத்திருந்தார் அம்மா எலினார் லூயிசின் அப்பா. டெட்டின் தாத்தா. ஆனால், தினசரி எலினாரையும் டெட்டையும் அடித்து துவைப்பது மட்டுமே சமூகத்தின் அழுத்த த்திலிருந்து தப்பிக்க உதவியது. இதனால் அங்கிருந்து தன் சகோதர ர்களின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தார் எலினார்.

அங்குதான் எலினாருக்கு பிடித்த சமையல்காரர் மன(ண)த்துணையாக,கிடைத்தார்.


அம்மா, ஜானி பண்டி என்பவரைத் திருமணம் செய்தார்.அது டெட் பண்டிக்கு பிடிக்கவில்லை. காரணம், இரண்டாவது தந்தை அழகாகவும் இல்லை. அவர் கையில் பெரியளவு பணமும் இல்லை. இதை அவர் தன் பெண்தோழியிடம் சொல்லிச் சிரித்தார்.

இயல்பிலேயே வாட்ட சாட்டமான ஆள். வசீகரமான தோற்றம் என பள்ளியிலேயே புகழ்பெற்றிருந்தார் டெட் பண்டி. அடுத்தடுத்து ஜானி பண்டியின் வாரிசுகள் பிறக்க, குடும்பத்தில் ஓரம்கட்டப்பட்டார் டெட் பண்டி. ஆனாலும் மனுசன் படிப்பில் பின்னி எடுத்தார்.

1967 ஆம் ஆண்டு டெட் பண்டியின் வாழ்க்கையை மாற்றிப்போட்ட ஆண்டு. இந்த ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான் 36 பெண்களை டெட் பண்டி கூறுபோட்டு கொன்றதற்கு காரணம். ஏறத்தாழ மன்மதன் படம்போல என வைத்துக்கொள்ளுங்களேன்.

ஆள் வேறு பார்க்க பர்சனாலிட்டியாக இருந்ததால், சீமான் வீட்டுப் பெண் ஸ்டெபானியா ப்ரூக்ஸுக்கு டெட் பண்டி மிகவும் பிடித்துப்போனார். அதுவும் அதிகம் பேசாத ஆள். போதாதா? டேட்டிங், சாட்டிங்.. இன்ன பிற சமாச்சாரங்களும் செய்தனர். ஆனால் 1968 ஆம் ஆண்டு பணக்கார குல வழக்கப்படி, டெட் பண்டியை பயன்படுத்திய ப்ரூக்ஸ் சிம்பிளாக போய்ட்டு வர்றேன் செல்லம் என கிளம்பிவிட்டார். டெட் பண்டிக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஜாலியாக ப்ரூக்ஸூடன் சுற்றித் திரிந்த இடங்கள் எல்லாம் உடனே எரிச்சல் தரும் இடங்களாக மாறித்தெரிந்தன. உடனே படிப்பை கைவிட்டு கால்போன போக்கில் சுற்றித்திரிந்தார். அதற்காக படிப்பை விட்டு பரதேசம் போனார் என நினைக்காதீர்கள். உளவியல் படிப்பை எடுத்து துல்லியமாக படித்து பட்டம் பெற்றது காதல் கருமாந்திரத்தை மனதிலிருந்து எடுத்தபின்தான். அதோடு மெக் ஆண்டர்ஸ் என்ற பெண்ணின் காதலும் டெட் பண்டிக்கு வாழ்க்கை மீதான ருசி பழக காரணமாக இருந்தது. மெக் ஆண்டர்ஸ் விவாகரத்து பெற்ற ஆன்டி. அவளுக்கு குழந்தை கூட இருந்தது.


1973 ஆம் ஆண்டு டெட் பண்டிக்கு பழிவாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யெஸ். ப்ரூக்ஸை மீண்டும் சந்தித்தார். இப்போதும் ப்ரூக்ஸ், டெட் பண்டியின் வசீகரத்துக்கு மயங்கினார். படுக்கையில் சரிந்தார். கைவிரல் நீட்டி சரச நாடகம் நடத்தினார். டெட் பண்டியிடம் நானோ அளவு கோபம் கூட இல்லை. அனைத்தும் இசைந்தார். படுக்கையிலும் இயங்கினார். மெல்ல திருமண ஆசையை ப்ரூக்ஸுக்குத் தூண்டினார். பிளான் சக்சஸ். உடனே போன் நம்பர், செய்தி அத்தனையையும் துடைத்தெறிந்துவிட்டு குட்பை சொன்னார். ஏன் தெரியுமா? ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ப்ரூக்ஸ் செய்த அதே கைவிட்ட காரியம்தான். துரோகம்தான். டெட் பண்டி அப்போதாவது நிம்மதி ஆனாரா?

1970 களில் மட்டும் 36 பெண்களை வேட்டையாடினார். காரணம், காதல் காயம்தான். குறிப்பாக ப்ரூக்ஸின் முகசாயல் கொண்ட பெண்கள் இதற்கு பலியானார்கள். முதல் பலி, கரன் ஸ்பார்க்ஸ் என்ற பதினாறு வயது பெண்தான் முதல் பலி. அவளின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றவர், கம்பி ராடை எடுத்து முதலில் பெண்ணின் மண்டையில் நச்சென அடித்தார். அடுத்து அதே கம்பியை அப்பெண்ணின் யோனியில் செருகினார். பெண் பிழைத்தாளா என்று கேட்டீர்களா? பத்து நாட்கள் கோமாவில் கிடந்த பெண் பிழைத்தாள். ஆனால் அடித்த காட்டு அடியில் உடல் பாகங்கள் நொறுங்கியதால் நிரந்த ஊனம் ஏற்பட்டுவிட்டது.

அடுத்து லிண்டா ஆன் என்ற இளம்பெண். இவளது வீட்டுக்குச் சென்ற டெட் அடித்த அடியில் அப்பெண்ணும் சுயநினைவை இழந்துவிட்டார். பின் அப்பெண்ணை தூக்கிச்சென்று புதைத்துவிட்டார். போலீசுக்கு விஷயம் தெரிந்த போது கிடைத்தது மண்டை ஓடு மட்டும்தான்.

முதல் பகுதி நிறைவு.

நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன்







பிரபலமான இடுகைகள்