இந்திய சைக்கோ கொலைகாரர்கள்! - சிறுகுறிப்பு
freevectors |
மூளையில் ஏற்படும் கீறலா, அல்லது பாதிப்பா என்று எதையும் கூறிவிடமுடியாது. இளமையில் ஏற்படும் சிறிய பாதிப்பு மனதில் கிளைவிட்டு குற்றம் குறித்த பயம் அகற்றும்போது, சமூகத்திற்கு பெரும் பிரச்னையாக அவர் மாறுகிறார். அவரைத்தான் சட்டமும் சமூகமும் சைக்கோ கொலைகாரர் என அழைக்கிறது.
அவருக்கு பின்னணியாக இருந்த விஷயங்கள், தூண்டுதல் கொடுத்த ஆட்கள், பாதிப்பு என்ன என்பது பற்றி நாம் பலரும் யோசித்தது இல்லை. பாதிப்புக்கு காரணம் என்றால், உடனே தூக்கு அல்லது அந்த இடத்திலேயே என்கவுண்டர் என்பது தீர்வாக போலீஸ் தருகிறது. இதனை மக்களும் போலீசாரின் புஜவலிமையாக ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் இறப்பு என்பது முடிவு அல்ல. அது ஒரு புதிய தொடக்கம். கருத்தாக தான் செய்வது பற்றி(துப்பாக்கிச்சூட்டை ) ஃபேஸ்புக் லைவில் ஒருவர் பதிவிடுகிறார் என்றால் அவர் எதற்கும் துணிந்தவர்தானே! அவரை நீங்கள் மின்சார நாற்காலியிலேயே உட்காரவைத்து கொன்றாலும் என்ற பயன் கிடைத்துவிடப்போகிறது? ஏறத்தாழ அவரின் குரூரத்தில் ஐம்பது சதவீத்தை நம்மிடையே விட்டுவிட்டு போகிறார் என்றுதானே ஆகிறது.
ஆட்டோ சங்கர்
சென்னை, திருவான்மியூரில் இளம் வயது பெண்களை கடத்தி கற்பழித்துக் கொன்றார் கௌரி சங்கர் என்கிற ஆட்டோ சங்கர். முதலில் கொலைகளை மறுத்தவர், பின்னாளில் சில அரசியல்வாதிகளுக்காக கொலைகளைச் செய்தேன் என்று மாற்றிப் பேசினார். மத்திய சிறையிலிருந்து தப்பித்து ஓடியவர், ஒடிசாவின் ரூர்க்கியில் பிடிபட்டார். சேலம் சிறையில் 1995 ஆம் ஆண்டு தூக்கில் போடப்பட்டார்.
சயனைட் மோகன்
மோகன் குமார் என்கிற சயனைடு மோகன். பெயருக்கு காரணம் இல்லாமல் இல்லை. திருமணமாக பெண்களைக் கடத்தி வந்து செக்ஸ் வைத்துக்கொள்வார். கர்ப்பம் ஆயிடுவ என பயம் காட்டி கர்ப்ப கலைப்பு மாத்திரைக் கொடுப்பார். அங்குதான் ட்விஸ்ட். கொடுக்கும் மாத்திரை சயனைடு. இப்படி இருபது பெண்களை கொன்றார் மோகன். 2005 -2009 காலகட்டத்தில் இதைச் செய்தார். தொடக்கப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலைபார்த்தவர்தான். பல்வேறு நிதிமுறைகேடுகளிலும் இவரது பெயரைக் குறிப்பிடுகின்றனர். 2013 ஆம் ஆண்டு மோகனைக் தூக்கிலிட்டு கொன்றனர்.
தேவேந்திர சர்மா
தேவேந்திர சர்மா, சாதாரணமாக பார்த்தால் சியவனப்பிரகாசத்தை உருட்டிக் கொண்டிருந்த ஆயுர்வேத மருத்துவர்தான். அவரின் இன்னொரு பக்கம் இருளானது. அதிலும் காலம் டார்ச் லைட் அடித்து பார்த்தது. 2002 - 2004 ஆம் ஆண்டு உ.பி, குர்கான், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கார்களைத் திருடி டிரைவர்களை அடித்துக் கொன்றார். மொத்தம் நாற்பது ட்ரைவர்களை அடித்து கொன்ற குற்றத்திற்காக 2008 ஆம் ஆண்டு இவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்