கோல்டுமேன் சூழல் பரிசு 2019!






Image result for goldman prize 2019


கோல்டுமேன் சூழல் பரிசு 2019 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆறுபேர் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆளுமைகள் இதில் அடக்கம்.

1989 ஆம் ஆண்டு தொடங்கிய கோல்டுமேன் சூழல் பரிசுக்கு இந்த ஆண்டு 30 வயது ஆகிறது. இதுவரை 89 நாடுகளைச் சேர்ந்த 194 சூழலியலாளர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

லைபீரிய காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்திய வழக்குரைஞர், மங்கோலியாவில் காடுகளை பாதுகாக்க முயற்சித்த சூழலியலாளர், பால்கன் பறவைகளைக் காப்பாற்ற முயற்சித்து வரும் வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த உயிரியலாளர், சிலியைச் சேர்ந்த பழங்குடி தலைவர். இவர் நீர்மின்நிலையம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். கடல் சூழலியலாளர் ஒருவர் அமெரிக்காவில் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தைத் தடுத்து வருகிறார்.

நன்றி: குளோபல் ஈகோகிரான்ட்ஸ் - ஈகோவாட்ச்