சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்!






Art of Christopher Uminga



சைக்கோ கொலைகாரர்கள் - நூல்கள்


சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்களை படிக்காவிட்டால் நீங்கள், எஃப்பிஐ, கேஜிபி, மொசாட் என பல்வேறு நாடுகளின் க்ரைம் பட்டியல்களை துப்பு துலக்க வேண்டியிருக்கும். அதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் ஏராளமாக தகவல்களைச் சேகரித்து நூல்களாக எழுதியுள்ளனர்.அப்படிப்பட்ட நூல்களில் சில..


The Misbegotten Son by Jack Olsen

ஆர்தர் ஜே சாகிராஸ் என்ற சீரியல் கொலைகாரரைப் பற்றி ஜேக் ஆல்சன் ஆராய்ந்துள்ள நூல் இது. நுணுக்கமாக நுட்பமாக இவரின் மனநிலையைப் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஒருகாலத்தில் நியூயார்க் வாசிகளை தூங்கவிடாமல் வதைத்த கொடூரனின் கதை இது.

Lustmord by Brian King
I : The Creation of a Serial Killer by Brian King

நூல் முழுக்க கட்டுரை, வாசகங்கள், கவிதை என அனைத்தும் உண்டு. இவை எதையும் பிரையன் கிங் எழுதவில்லை என்பதுதான் விசேஷம். எழுதியவர்கள் அனைவரும் சீரியல் கொலைகாரர்கள். ராஜேஷ்குமார், கோட்டயம் புஷ்பநாத் போல எழுதவில்லை என்றாலும் ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை எழுதினால் அடையாளம் கண்டு கொள்ளலாம் அல்லவா? நூல் அதற்கு உதவும்.

இரண்டாவது நூல், ஹீத் ஹன்டர் ஜெஸ்பர்சன் என்ற கொலைகாரரைப் பற்றி பிரையன் எழுதியது.

Jack the Ripper: An Encyclopedia

இங்கிலாந்தை 1888 ஆம் ஆண்டு கலக்கிய சைக்கோ கொலைகாரர். 2011 ஆம் ஆண்டுவரை விசாரித்தும் கூட துப்பு கிடைக்கவில்லை. ஐந்து பெண்களை குரூராக கொன்றவரை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது குறித்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். 



அமெரிக்காவின் டெக்சாஸில் ட்ரூமன் சைமன்ஸ் என்ற போலீஸ்காரர், க்ரைம் வழக்கு ஒன்றை கையில் எடுத்தார். பார்க் ஒன்றில் இறந்துபோன மூன்று இளைஞர்களைப் பற்றியது அது. அந்த வழக்கு குறித்தும், அதில் தொடர்புடையோர்களை சைமன்ஸ் சந்தித்தது குறித்தும் விளக்குகிறது இந்த நூல். 



ஏறத்தாழ சைக்கோ கொலைகார ர்களிடமும் பேச யாரோ ஒரு அதிகாரி இருப்பார் அல்லவா. அப்போதுதான் குற்றவாளிகள் குறித்த பதிவுகளை ஏற்படுத்த முடியும். ராபர்ட் செய்ததும் அதுவேதான். ஜான் வெய்ன் கேசி, டெட் பண்டி ஆகியோரிடம் பேட்டி கண்டு அதனை பதிவு செய்தார். 


ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: பின்டிரெஸ்ட்