இங்கிலாந்தை மிரள வைத்த பிளாக் பாந்தர்!
இங்கிலாந்தின் பிளாக் பாந்தர்.
இந்த பிளாக் பாந்தர், காமிக்ஸ் நாயகர் போல அரசைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. தபால் வங்கியைத் தாக்கி அங்கிருந்த பணவிடைத்தாள்களை பைசாவாக்க முயற்சித்தார். அதையும் கூட சாகசவெறிக்கு அடையாளமாக செய்தார்.அம் முயற்சியில் மூன்று பேரை கொன்றார். ஆனாலும் கூட பெரிய லாபம் கருதி அதை செய்யவில்லை.
அவர் பெயர் டொனால்டு நீல்சன் அவருக்கு அது பிடித்திருந்தது செய்தார். 1970 களில் தபால் ஆபீசுகள், வீடுகளில் புகுந்து திருடி சாகசம் செய்தார். பெரியளவு அதனால் லாபம் சம்பாதிக்கவில்லை. ஆனால் மின்னல் வேகத்தில் நுழைந்து திருடிவிட்டு தப்பித்து ஓடுவதை பார்த்தவர், பிளாக் பாந்தர் திருடன் என பெயர் வைத்தார். அப்போது கூட போலீஸ் பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. அப்போதே மூன்று தபால் அதிகாரிகளை கொன்றிருந்தார். அதனை ஒருவர்தான் செய்திருப்பார் என்று கூட போலீஸ் யோசிக்கவில்லை.
ஆனால் ஒரே ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்டுவிட்டது. அது காசு கிடைக்கும் என்று பதினேழு வயது பெண்ணைக் கடத்தியது. புகழ்பெற்ற பணக்கார ரின் மகள் என்றால் சும்மாவா? உடனே பேப்பரில் கடத்தியது சார்? காதல் காரணமா? காமம் காரணமா என செய்திக்கட்டுரைகள் தூள் பறந்தன.
லெஸ்லி விட்டில் என்ற பெண்தான் அவள். அவளை அடைத்து வைத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பணம் கேட்டார் நீல்சன். ஆனால் தராமல் அப்பா, மகன் என குடும்பமே போலீசை நம்பியதால் எரிச்சலானவர், லெஸ்லியை கொன்றுவிட்டார். மூன்று நாட்களாக ட்ரைனேஜ் குழாயில் பெண்ணைக் கட்டிப்போட்டு சோறுபோட்டார். அந்த பெண்ணோ ஒருவாய் உணவைக் கூட சாப்பிடவில்லை.
பெண் இறந்துபோனாள். நீல்சனை போலீஸ் கூட எதார்த்தமாகத்தான் பிடித்தது. ஆனால் போலீசை துப்பாக்கி காட்டி மிரட்ட நிலைமை விபரீதமாக முடிந்தது.
குலைந்துபோன இளமைக்காலம்
1936 ஆம் ஆண்டு பிராட்போர்டில் பிறந்த நீல்சன், கூடப்படித்த ஐரீன் டாட்டே என்ற தோழியை திருமணம் செய்து செட்டிலானார். ஒரே மகள் கேத்தரின் பிறந்தாள். ஆனால் பிரச்னை பெயரில் இருந்தது நாப்பே என்ற பெயர் மகளுக்கும் இருந்தது. இளமையில் பள்ளியில் தான் இப்பெயரால் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டதை நினைத்தாலே நீல்சனுக்கு ரத்தம் குளிரிலும் லாவாவாக பொங்கி மனதைப் பொசுக்கியது. வீடு அலங்காரம் மற்றும் வண்டி ஓட்டியாக வேலை பார்த்து வந்தார்.
பகுதிநேரமாக இரவில் ஜன்னல் உடைத்து பொருட்களை திருடுவது வேலை. அதில் காட்டிய சாகசத்தைப் பார்த்துத்தான் பிளாக் பாந்தர் பெயர் கிடைத்தது. மொத்தம் 400 வீடுகளை களவாண்டு சாதனை செய்தார் நீல்சன். ஆனால் பெரிதினும் பெரிது கேள் என முயற்சித்தபோதுதான் வாழ்க்கை நிலை குலைந்து போனது.
1975 ஆம் ஆண்டு, போலீஸ்காரை போலீஸ்கார ர்களுடன் கடத்த முயன்று அநியாயமாக மாட்டிக்கொண்டார். அதோடு லெஸ்லி என்ற பெண்ணை கடத்தி கழுத்தை நசுக்கி கொன்ற குற்றமும் பின்னர் வெளிப்பட மாட்டிக்கொண்டார். இவருக்கு எதிராக இவரது மனைவி ஐரீனே சாட்சி சொன்னார். இதனால் அவருக்கும் எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
நீதி சமநிலைக்கு வந்துவிட்டது போல உங்களுக்குத் தோன்றலாம். கொலை, கொள்ளைகளுக்கு தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்தனர். நீல்சன் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று மூச்சுவிடமுடியாமல் இறந்துபோனார்.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன், விக்கிப்பீடியா
Image - pinterest