நச்சு உணவு பாதிப்பு என்ன?
உணவு விஷமானால்.....
தள்ளுவண்டிக் கடையில் சரவணன் அண்ணன் விற்கும் மீன்குழம்பை சோற்றுடன் ஒரு வெட்டு வெட்டுகிறீர்கள். ஆனால் தின்றபின்தான், தெரிகிறது குழம்பு கெட்டிருக்கிறது என. ஆம் இந்த இடத்தில்தான் உணவு விஷமாகிறது. இதனை சரிசெய்ய உடல் என்ன செய்கிறது? வாந்தி, வயிற்றுப்போக்கு. இதற்குள் விஷ உணவு வெளியே வந்துவிட்டால் சரி. இல்லையென்றால் ஆஸ்பத்திரக்கு சென்று சிகிச்சை செய்வதே ஒரே வழி.
சாதாரணமாக சால்மோனெல்லா, கேமிலோபாக்டர் ஆகிய பாக்டீரியாக்கள் பொதுவாக உணவு மூலம் உடலுக்குள் சென்று குடலைத் தாக்குகின்றன. மூளை இதனை வெளியேற்றவே வாந்தியை உருவாக்குகிறது.
நன்றி: பிபிசி