ஊட்டச்சத்துக் குறைவு - குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு





Image result for nutrition
beacon house



நுண்ணூட்டச்சத்துக் குறைவில் தடுமாறும் குழந்தைகள்!


பெங்களூரூவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விலங்கு புரதம் குழந்தைகளுக்கு அவசியத்தேவை என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட 38 சதவீத குழந்தைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இளம் குழந்தைகள் உணவில் சரியான புரதமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக அவர்களின் மூளை வளர்ச்சிக்கு தேவையான லைசின் என்ற அமிலம் கிடைப்பதில்லை.

பெங்களூரைச் சேர்ந்த செயின்ட்ஜான் மருத்துவக் கல்லூரி, இதுகுறித்த ஆய்வை செய்தது. ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் முட்டை மற்றும் பால் தேவையான அளவு கிடைக்காததால், பத்து சதவீத அளவு புரதப் பற்றாக்குறையை சந்திக்கின்றனர்.
இது இப்படியே வளர்ந்தால், முட்டை மூலம் ஏழு சதவீதமும், பால் மூலம்  எட்டு சதவீதமும், பருப்பு மூலம் பதினொரு சதவீதமும் புரதப்பற்றாக்குறை உருவாகும் வாய்ப்புள்ளது. மூன்று வயதுக்குள் புரதம் மூலம் கிடைக்கும் அமினோ அமிலங்கள் சரிவர கிடைக்கப் பெறாததால், ஊட்டச்சத்துக்குறைவு ஏற்படுகிறது. இதில் வறுமை, சுகாதாரம் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன என்கிறது இந்த ஆய்வறிக்கை. இது, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

நன்றி: தி இந்து