பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய சவால்கள் உண்டு!





Dr. Li Xing while during her postdoc at Indiana University - Purdue University Indianapolis (IUPUI). Photo Courtesy: Li Xing.
Add caption


நேர்காணல்

டாக்டர். லீ ஜிங், விக்டோரியா பல்கலைக்கழகம்(புள்ளியியல்துறை)
புள்ளியியல் துறை மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
கணிதத்துறையில் மாணவராக படித்துக்கொண்டிருந்தபோது உளவியலாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் புள்ளியியல் துறையில் பல்வேறு சோதனைகளை செய்துகொண்டிருந்தேன். கணித தியரி மற்றும் சமன்பாடுகளின் மீதான ஆர்வம் பெருகியிருந்தது. எனக்கு புள்ளியியல் துறை சவாலானதாகவும், அத்துறை சார்ந்தவர்களின் படைப்புகளைக் காண்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தேன்.

நீங்கள் என்னென்ன துறைகளில் ப்ராஜெக்டுகளைச் செய்திருக்கிறீர்கள்?

நான் நியூரோஇமேஜ் என்பதை ப்ராஜெக்டாக எடுத்து செய்தேன். இதன்மூலம் அதிகளவிலான தகவல்களை, எப்படி கையாள்வது அதனை தகவல் அறிவியல் துறையில் எப்படி பயன்படுத்துவது என கற்றுக்கொண்டேன். கடந்தாண்டு பல்வேறு ஆராய்ச்சி தலைப்புகளில் ப்ராஜெக்டுகளை முயற்சித்தேன். அதில் இரண்டு ஆய்வுகள், பத்திரிகைகளில் வெளியிடப்பட உள்ளன.

அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் என்ன சாதித்திருப்பீர்கள்?

நான் வெற்றிகரமான ஆராய்ச்சியாளராக இருப்பேன் என்று நினைக்கிறேன். பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் ஆதரவுடன் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருப்பது முக்கியம். ஆய்வு, ஆராய்ச்சி ரீதியில் சிறந்த குழுவில் இடம்பெற்றிருப்பதை விரும்புகிறேன்.

முனைவர் படிப்பை நீங்கள் படித்தாலும் இதில் ஏழில் ஆறுபேர் இதைக் கடந்த வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

பெண்கள் ஆராய்ச்சித்துறையை தேர்ந்தெடுத்து உழைத்து அங்கீகாரம் பெறுவது மிக சிரமம். உங்களுக்கு குடும்பம் இருந்தால் அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

நன்றி: யுவிஐசி வுமன்

பிரபலமான இடுகைகள்