செக்ஸ் மீது வெறுப்பு ஏன்?








Black and White Photography. Intimate couples portraits. Fashion and style portrait photography by Cloudy Day Photography.
northwest gift\pinterest




போதும் போதும் செக்ஸ் போதும்.....



அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், பதினெட்டு முதல் 30 வயதான பெண்கள் கடந்த ஓராண்டாக பாலுறவில் ஈடுபடவில்லை என கருத்து தெரிவித்திருந்தனர். இதில் ஆண்களின் அளவு 28 சதவீதம்.


இதுபற்றிய ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இதற்கு என்ன காரணம் என்று உளவியலாளர் லியோனார்டு சாக்ஸிடம் கேட்டோம்.  வீடியோகேம்சும், பாலியல் படங்களும்தான் இதற்கு காரணம் என ஒரே போடாக போட்டார்.

 மற்றொரு உளவியலாளரான ஜீன் ட்விங்கே, டீனேஜ் பருவத்தில் காதலி இல்லாததும், அவர்களோடு ஒன்றாக வாழாததும் இன்று கலாசாரமாக மாறிவருகிறது.இந்நிலையில் பாலுறவு குறைந்துவருவதில் ஆச்சரியமென்ன? என்கிறார்.

2014 ஆம் ஆண்டு 35 சதவீத ஆண்களும், 28 சதவீத பெண்களும் தங்களின் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் சராசரி வயது 18- 34.


பாலுறவு குறைந்ததற்கு முக்கியக் காரணம், பெற்றோருடன் வசித்து வரும்போது காதலியை எப்படி வீட்டுக்கு கூட்டி வருவது என்ற தர்மசங்கடமான நிலையும், இளைஞர்களின் மாறிவரும் மனநிலையும் இதில் முக்கிய காரணம்.


இன்னொரு பொருளாதார ரீதியிலான காரணம், அமெரிக்காவில் ஏற்பட்ட 2008 ஆம் ஆண்டு நிதிச்சந்தை குலைவு ஆகும்.


நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்











பிரபலமான இடுகைகள்