மீன்களைக் காப்பாற்றிய கடல் சூழலியலாளருக்கு அங்கீகாரம்!



Image result for divya karnad
indian women blog





கடல் சூழலியலாளருக்கு ஃப்யூச்சர் பார் நேச்சர் விருது!

திவ்யா கர்நாட், தன் இணையதளத்தில் மீன் தொடர்பான பல்வேறு உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதோடு சீசனில்  கடலில் கிடைக்கும் மீன்வகைகளை அதி துல்லியமாக பதிவு செய்துள்ள அக்கறைக்குத்தான் அவருக்கு ஃப்யூச்சர் ஃபார் நேச்சர் விருது (2019) கிடைத்துள்ளது.


சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், திவ்யா.  சிறுவயதிலிருந்து விலங்குகள் மீதான பிரியம், அவரை சூழலியலாளராக மாற்றியுள்ளது. 


Image result for divya karnad
currentaffairsadda







நான் முதலில் கால்நடை மருத்துவராகவே முயன்றேன். ஆனால் காட்டுயிர் சார்ந்த துறையில் காலூன்றி உள்ளேன் என புன்னகைக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்காக தமிழ்நாடு மற்றும் ஒடிஷாவில் பணியாற்றிவர் இவர்.

ஆமைகளை மீனவர்கள் அழிப்பது போல காட்சியை ஊடகங்கள் உருவாக்கினாலும் அதனை உண்மையில்லை என்று மறுக்கிறார் திவ்யா. சீசனில்லாத போது, மீன்பிடி தடைக்காலத்திலும அவர்களுக்கு வாழ்வாதாரமாக மாறுவது இந்த ஆமைகள்தான். இவற்றை விற்று வரும் பணத்தை, வாழ்வதற்கு ஆதாரமாக கொள்கின்றனர் மீனவர்கள்.

இதற்கு முக்கியமான வழியாக, அந்தந்த சீசனில் கிடைக்கும் மீன்களை சாப்பிடுவதற்கான பிரசாரத்தை திவ்யா செய்திருக்கிறார். முதலில் இதுகுறித்து ஏளனங்களும், ஏமாற்றங்களும் வந்தாலும் இவர் மனம் தளரவில்லை. பல்வேறு உணவகங்களிலும் பேசி சீசன் உணவுகளுக்கான சந்தையை தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கினார். பிஷ்புளோரேஷன் எனும் திட்டத்தை உருவாக்கினார்.


மும்பையின் தண்டா ஃபுட் ப்ராஜக்ட் என்பதைப் போலான உணவு சந்தையை இன் சீசன் ஃபிஷ் எனும் திவ்யாவின் அமைப்பு உருவாக்க முயற்சிக்கிறது. இயற்கை வழங்கிய கொடைதான் கடல். அதிலுள்ள மீன்களை அரித்து எடுத்து பேராசையுடன் வணிகம் செய்வது தவறானது. எனவே சீசனுக்கேற்ற மீன்களை நம் நாட்டிலுள்ள ஏழை, பணக்காரர்கள் என அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் நோக்கம் என்று புன்னகைத்து வழியனுப்பினார் திவ்யா.

நன்றி: டெக்கன் கிரானிக்கல் - செரிலான் மோலன்















பிரபலமான இடுகைகள்