வழி தெரியாமல் தடுமாறுவது ஏன்?
Design Intervention |
நம்மில் சிலர் வழி சொன்னாலும், அதனைக் கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுவது ஏன்?
அண்மையில் நண்பர், அமேசான் டெலிவரி பையனுக்கு வழிசொல்லியே களைத்துப்போனார். பில்டிங் பின்னாடி ஹாஸ்டல். அதுக்குப்பக்கத்தில் ஆபீஸ் முதல் மாடியில் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எதிர் முனையில் பையன், பில்டிங் என்பதிலேயே ஸ்ட்ரக் ஆகி நின்றுவிட்டார்.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம், தன்னை ஒரு தெருவில் விட்டால் விரைவிலேய தொலைந்துபோய்விடுவேன் என்று பகிரங்கமாக பலவீனத்தை சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? மூளையிலுள்ள ஃபிரன்டல் மற்றும் டெம்பொரல் பகுதிகள்தான். திசைகளை மிகச்சிறப்பாக காம்பஸ் இல்லாமல் கண்டுபிடிப்பவர்களுக்கு இப்பகுதிகள் பெரிதாக இருப்பதை அண்மைய ஆய்வுகள் கூறியுள்ளன.
நன்றி: பிபிசி