அறிவியல் ஆப்ஸ் 2019! - என்ன புதுசு?
அறிவியல் ஆப்ஸ்!
ஆண்ட்ராய்டுவில் ஜாலி பாட்டு கேட்பது மட்டும் வாழ்க்கையா? அதிலும் ஏதாவது செய்தி, அறிவியல் என ஆக்கப்பூர்வ ஐன்ஸ்டீன்கள் நிறைய ஆட்கள் உண்டு. அப்படிப்பட்ட ஆப்ஸ்கள் சில இதோ....
பயோபிளாக்ஸ்
இந்த ஆப், டெட்ரிஸ் பாணியிலான விளையாட்டைக் கொண்டது. இதனை லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். உடலில் வைட்டமின்கள், புரதங்கள் எப்படி சேர்கின்றன. அவற்றின் பற்றாக்குறையால் என்ன பாதிப்பு நேருகின்றன என்பதை இந்த விளையாட்டு எளிமையாக சொல்லித் தருகிறது. இதில் 3டி வடிவமும் உண்டு. எனவே, குடிமகன்கள் எளிதாக விளையாட்டை விளையாடி அதன் வழியாக அறிவியலையும் கற்றுக்கொண்டு ஜமாய்க்கலாம்.
acceleratAR
இந்த விளையாட்டில் சில பேப்பர் க்யூப்கள் இருக்கும் அவ்வளவுதான். அணுத்துகள், மின்காந்த அலைகள் ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொள்ள இந்த ஆப் உதவுகிறது.
SketchAR
வரைய ஆசைப்படும் டாவின்சிகள், வான்காக்கள் இந்தியாவில் நிறையப்பேர் உண்டு. அவர்களுக்கான ஆப் இது. ஸ்கெட்ச் ஏஆர், பின்னணியில் படம் இருக்கும். அப்படியே அதை ட்ரேஸ் செய்து வரைந்தால் நீங்களும் பெரிய ஓவியர் ஆகிவிடலாம். பிக்காஸோ கூட மேலிருந்து உங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கவும் வாய்ப்புள்ளது.
Pocket Code
உங்கள் விளையாட்டுகளுக்கான கோடிங்கை நீங்களே எழுதினால் எப்படி இருக்கும்? நீங்களே எழுதலாம் என நம்பிக்கை கொடுக்கும் ஆப் இது. இதில் அனிமேஷன், இசை என பலதையும் நீங்கள் முயற்சித்து மெகா கேம் டிசைனராக மாறலாம்.
Thinkrolls: Kings & Queens
இருநூறுக்கும் மேற்பட்ட புதிர்கள் உள்ளன. அனைத்தும் அறிவியல்தான். இதில் இயற்பியல், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் என அனைத்தையும் சோதித்துப் பார்த்து முடிவு செய்யமுடியும்.
நன்றி: பிபிசி