ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

Spider silk could be used to make robotic muscles © Getty Images
பிபிசி

சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான். 

தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார். 

காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான். 

இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. வலையின் அமைப்பை புரிந்துகொள்ள இரை தடுமாறும் சமயத்தில் சிலந்தி மின்னல் வேகத்தில் அதனை லபக்கி விடும். 

இந்த தன்மை ஆராய்ச்சியாளர்களை கவரவே தற்போது சிலந்தி வலையை புரோலைன் புரதத்தோடு கலந்து , செயற்கை தசைகளாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். 

நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்