அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன





Image result for ramakanta panda
விக்கிப்பீடியா


நேர்காணல்:

இதயநோய் மருத்துவர் ரமணகாந்த் பாண்டா

இதயநோய் பிரச்னைகள் மரபணுரீதியாக இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புண்டா?

நோய் மேம்பாடு தொடர்பாக இன்று மருத்துவர்கள் மிகச்சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளனர். உடல்நல மேலாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது?

இந்தியர்கள் கண்ணை மூடியபடி மேற்கத்திய உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது பல்வேறு நோய்களை உருவாக்கி வருகிறது. இன்று உருவாகிவரும் பல்வேறு டயட் முறைகள், ஆராய்ச்சியின்பாற்பட்டு உருவாகி வருவதல்ல. இன்ஸ்டன் பலன்களை எதிர்பார்த்து உருவாகும் இந்த டயட்களை நம் உடல்நலனை பாதாளத்தில் தள்ளுவது உறுதி. குப்பை உணவுகள் குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது.


உடல்பருமனைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை மட்டுமேதான் ஒரே வழியா?

இன்றைய நோயாளிகள் யாரும் ஏமாளிகள் அல்ல. அவர்கள் பலரும் மருத்துவர்கள், இணையம் என கருத்துக்களை கேட்டுவிட்டே அறுவைசிகிச்சை முடிவுக்கு வருகிறார்கள். அறுவைசிகிச்சையைத் தவிர்க்கும் நிலையிலும் அவர்கள் அதுவே ஆரோக்கியத்தை தரும் என்று வற்புறுத்தும்போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?

மேலும் புது சிகிச்சைகளை காஸ்மெடிக் பொருட்களைப் போல சோதனை செய்து பார்க்க துடிக்கும் மனநிலை ஆபத்தானது. அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மோசமாகும்போது, உடனே மருத்துவரை குற்றம்சாட்டுகிறார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் யாருக்கும் தேவையில்லாத அறுவைசிகிச்சைகளை பரிந்துரை செய்ததில்லை.

சுகாதாரத்துறையில் அரசு தலையிடவேண்டிய விஷயங்களாக எதனைக் கூறுவீர்கள். 


விலை குறைவாகவும் எளிதில் மருத்துவ வசதிகளை பெறும்படியும் அரசு உதவலாம். இந்தியாவில் மட்டும்தான் மருத்துவ சிகிச்சைகள் உலகிலேயே மிக குறைவான விலைக்கு கிடைக்கின்றன. பிஎம்ஜேஏஒய் திட்டம் நீண்டகால நோக்கில் பலன்களைத் தரக்கூடியது.

அரசு மருத்துவத்துறைக்கு என சரியான பட்ஜெட்டை இன்றுவரை ஒதுக்கவில்லை. அப்புறம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை எப்படி சமாளித்து நோய்களை தீர்ப்பார்கள்? இதனால் மக்கள் அதிக விலை என்றாலும் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச்செல்லும் நிலை ஏற்படுகிறது.


அடுத்து, நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மருத்துவப் பொருட்கள் அனைத்தும் இறக்குமதிகளே. நாம் இந்தியாவில் இதனை தயாரிக்கும்போது சிகிச்சை செலவுகளும் குறையும்.


மருத்துவர்கள் பலரும் கட் பிராக்டிஸ் எனும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனரே?

நான் இந்த பயிற்சி பெறாத மருத்துவர்களின் பாணிக்கு முற்றிலும் எதிரானவன். மருத்துவத்துறையினர் ஒன்றுதிரண்டு இந்த முறையை எதிர்க்க வேண்டும். உடனே மாற்றம் நிகழாது. ஆனால் மாற்றத்திற்கான ஒளி இப்போது தென்படுகிறது.


அரசு மருத்துவமனைகள் இதயநோய் அறுவை சிகிச்சைகளை எப்படி அணுகுகிறார்கள்?

அரசு மருத்துவமனைகள் அவர்களிடம் உள்ள வசதிகளைப் பொறுத்தவரை சிறப்பாகவே செயல்படுகிறார்கள். மக்களின் பணத்தை அங்கு செலவிடுவதால், தேவையில்லாத சிகிச்சை பரிந்துரைகள் அங்கு கிடையாது.

குழந்தைகள் நலத்தில் அரசு மருத்துவமனைகள் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா - சுகந்தா இந்துல்கர்





















பிரபலமான இடுகைகள்