அறிவியல் ஈஸி!
டாப் 5 தகவல்
திருட்டு!
இமெயில் திருட்டு!
பிரான்சின் தற்போதை
அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மரைன் லெ பென் இருவருக்கும் கடுமையான அரசியல்
போட்டி இருந்தது. மேக்ரானின் என் மார்ச்சே கட்சியின் இமெயில்
கணக்கு ஹேக் செய்யப்பட்டு 9 ஜிபி அளவிலான தகவல்கள் வெளியானது
பெரும் அதிர்ச்சி தந்த நிகழ்வு. PasteBin எனும் தளத்தில் வெளியாகி,
பின் விக்கிலீக்ஸில் பரவலானது.
பேங்க் கொள்ளை!
2016 ஆம்
ஆண்டு பிப்.26 வங்க தேசத்தின் மத்திய வங்கியில் SWIFT
எனும் பணப்பரிமாற்ற முறையில் 951 மில்லியன் டாலர்கள்
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு Dridex எனும் ட்ரோஜன்
ப்ரோகிராம் பயன்படுத்தப்பட்டது. வேர்ட் மற்றும் எக்ஸல் பைல் இணைப்பு
வழியாக வங்கி கணக்குகளை தாக்கியது.
WannaCry தாக்குதல்!
2017 ஆம்
ஆண்டு மே மாதம் Wannacry எனும் ரான்சம்வேர் இரண்டு லட்சத்திற்கும்
மேற்பட்ட கணினிகளை ஆட்டிப்படைத்தது. 2003 இல் NSA விலிருந்து ரிலீசான மால்வேர், விண்டோஸ்களை தாக்கி
1 லட்சத்து 26 ஆயிரம் டாலர்கள் நஷ்டம் ஏற்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு யாஹூ வின் தகவல்தளம்
கொள்ளையிடப்பட்டு பல கோடி பயனர்களின் தகவல்கள் வெளியே கசிந்தன.
2
VR சிக்கல்கள்!
2015 ஆம்
ஆண்டு விர்ச்சுவல் ரியாலிட்டி சந்தையில் கூகுள்,சாம்சங் நுழைந்ததால்
2016 ஆம் ஆண்டு முழுவதும் விர்ச்சுவல் ரியாலிட்டி பொருட்களுக்கான ஸ்பெஷல்.
மூளையில் தகராறு!
விர்ச்சுவல் உலகில்
தொடர்ந்து இருப்பதால் குமட்டல்,வாந்தி,பெருகும் வியர்வை,
தன்னிலை இழத்தல்,உடல் வெளுப்பு,தலைவலி ஆகியவை விஆர் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
விஆர் ஹெட்செட்களை 13 வயதுக்கு மேலுள்ள சிறுவர்கள்
மட்டுமே பயன்படுத்தலாம்.
இயங்காத நியூரான்கள்!
எலியிடம் நடத்தப்பட்ட
விஆர் சோதனையில் அதன் மூளையில் நிஜமான சூழ்நிலையைவிட விஆர் சூழலில் மூளையின் மிகச்சில
நியூரான்களே இயங்கின.
இது மைனஸ் என்றாலும் பிற்காலத்தில் இவை களையப்பட வாய்ப்புண்டு.
தனியொரு உலகம்!
கம்ப்யூட்டரும்
வீடியோ கேமுமாக இருப்பவர்கள் சமூகத்தோடு இணைவது கஷ்டம். தனிமை,மாறும் மனநிலை,அன்லிமிடெட் வன்முறை ஊற்றெடுக்கும் குணங்கள்
உருவாகும்.
மைனஸ் கடந்து, இதில்
பிளஸ்ஸும் உண்டு. மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் விர்ச்சுவல்
ரியாலிட்டி பாசிட்டிவ் பலமாக உள்ளது என்கிறார் மைக்கேல் டோனகன்.
3
பொசிஷன் மாறும்
மூளை!
விண்வெளிப்பயணம்
வீரர்களின் மூளையில் மாற்றம் ஏற்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஈர்ப்புவிசையற்ற
விண்வெளியில் அதிக காலம் தங்கிய வீரர்களின் மூளையை ஸ்கேன் செய்தபோது, மூளை சிறிது மேல்நோக்கி நகர்ந்திருந்தது. இதன் விளைவுகள்
தெரியாதபோதும், நாசா இம்மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சிகளை
தொடங்கியுள்ளது.
சர்வதேச விண்வெளிமையத்தில்
பணியாற்றிய
16 விண்வீரர்களின் உடலை MRI ஸ்கேன் செய்தபோது,
தலையில் அழுத்தம் ஏற்பட்டு பார்வை மாறுபடுவதற்கு காரணமாக மூளையின் மாற்றம்
இருக்கலாம் என யூகிக்கின்றனர். "நிலவு மற்றும் செவ்வாய்
பயணத்தின்போது செயற்கை புவியீர்ப்பு விசையில் பயிற்சிதேவை" என்கிறார் சவுத் கரோலினா பல்கலையில் ரேடியோலஜிஸ்டான டோனா ராபர்ட்ஸ்.
பூமியில் உள்ள ஈர்ப்புவிசை விண்வெளியில் இல்லாததால் மூளை மேல்நோக்கி
நகர வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆய்வு வல்லுநர்கள்.
4
சர்ச் எஞ்சின்
ஈ!
பழ ஈக்கள் பழங்களை
கண்டறிய சர்ச் எஞ்சின்களைப் போலவே செயல்படுவதை சாக் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்
கண்டுபிடித்துள்ளது.
பூவிலிருந்து வரும் வாசனையைப் பொறுத்து,
அது தனக்கு ஏற்றதா,வேண்டாமா என ஈக்கள் முடிவு செய்கின்றன.
"தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும் பிரச்னை இது. தேவையான தகவல்களை தேடுவதைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் பதிலை ஈக்கள் தந்துள்ளன"
என்கிறார் சாக் உயிரியல் ஆய்வகத்தைச் சேர்ந்த சாகெட் நவ்லகா.
ஈக்களின் மூளையிலுள்ள 50 நியூரான்களின் காம்பினேஷன்
வாசனையை அடையாளப்படுத்த 2000 நியூரான்கள் உதவுகின்றன.
வாழைப்பழத்தைச்
சுற்றி ஈக்கள் மீல்ஸ் டைமில் வலம் வருவது, பழகிய வாசனை காரணமாகத்தான்.
"இயற்கையில் வாசனை என்பது
மாறிக்கொண்டே இருக்கும்.நாம் பழகிய வாசனையை உடனே அறிகிறோம் அல்லவா,
அப்படியேதான் ஈக்களும் செயல்படுகின்றன" என்கிறார்
நவ்லகா. சர்ச் எஞ்சின் எதிர்காலம் ஈக்களின் மூளையிலும் இருக்கலாம்.
5
ஆட்டோமேட்டிக் நகரம்!
தென்கொரியா அண்மையில் தானியங்கி கார்களுக்காக
3,23,749 ச.மீ அளவில் நகரை உருவாக்கியுள்ளது.
சியோலிலிருந்து 32 கி.மீ
தொலைவில் அமைந்து K சிட்டி எனப்படும் இந்நகரம், தானியங்கி கார்களை டெஸ்ட் ட்ரைவ் செய்வதற்கென ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது.
தானியங்கி கார்கள் என்றாலும் மனிதர்களின் நகரத்திலுள்ள
பாலங்கள்,
சாலைகள், பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இயங்கவுள்ள ஆட்டோமேட்டிக் நகரத்தில்
ஹூண்டாய்,கியா,எஸ்கே டெலிகாம்,சாம்சங் ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களை டெஸ்ட் செய்யவிருக்கின்றன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 4,04,686 ச.மீ பரப்பில் வெய்மோ காஸ்டில் என்ற தானியங்கி கார்களை டெஸ்ட் செய்வதற்கான இடமும்,
மிச்சிகன் பல்கலையில் 1.4 ச.கி.மீ பரப்பில் புதிய கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய இடமும்
அமைக்கப்பட்டுள்ளது.
ைச்
சுற்றி ஈக்கள் மீல்ஸ் டைமில் வலம் வருவது, பழகிய வாசனை காரணமாகத்தான்.
"இயற்கையில் வாசனை என்பது
மாறிக்கொண்டே இருக்கும்.நாம் பழகிய வாசனையை உடனே அறிகிறோம் அல்லவா,
அப்படியேதான் ஈக்களும் செயல்படுகின்றன" என்கிறார்
நவ்லகா. சர்ச் எஞ்சின் எதிர்காலம் ஈக்களின் மூளையிலும் இருக்கலாம்.
6
மிராக்கிள் பிட்ஸ்!
டிசைனில் அச்சு
அசலாக சிறிய மானைப்போல கூடுதலாக கோரைப்பற்களைக் கொண்டுள்ள விலங்கின் பெயர் CHEVROTAIN
தும்பிகள் தம்
இணையோடு சேர்ந்திருக்கும்போது இதய வடிவில் உடல்களை இணைத்து சுற்றித்திரியும்.
பூனைகள் மியாவ்
என கத்தி நடுவில் கொஞ்சம் டிஸ்டர்ப் செய்வது மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே.
ஆண்களுக்கான டியோடிரண்ட் 1935 ஆம்
ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டு
வரை உடல் துர்நாற்றம், ஆண்களின் பெருமையாக கருதப்பட்டது.
1877 ஆம்
ஆண்டு ஹிட்லரின் அப்பா, ஹிட்லரின் பெயரை மாற்றி வைக்காதிருந்திருந்தால்
இன்று அவரின் பெயர், Adolf Schicklgruber என்று இருந்திருக்கும்.
தொகுப்பு: விக்டர் காமெஸி, ஜமீலா
நன்றி: முத்தாரம்