அறிவியல் பழகு!

Image result for Cristo del Miserere

சிலையில் சீக்ரெட்ஸ்!

ஸ்பெயினின் சான்டா அகுடா சர்ச்சிலுள்ள இயேசு சிலையில் சீக்ரெட் வார்த்தைகளை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. 'Cristo del Miserere' என்ற இயேசு சிலையின் தொடைப்பகுதி பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பொறுப்பை ஜீசஸ் ரெஸ்டாரோ என்ற நிறுவனத்துக்கு அளித்தனர்.
"18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையின் தொடைப்பகுதியில் இருந்த எழுத்தை முதலில் பூச்சி அரித்துள்ளது என்றே நினைத்தோம். ஆனால் என்தோழி அதனை அது எழுத்துதான் என உறுதி செய்தவுடன் சந்தோஷத்தில் கத்திவிட்டோம்" என நிகழ்வை விவரிக்கிறார் ஆய்வாளர் ராமிரெஸ்வா. கையினால் எழுதப்பட்டதை போட்டோ எடுத்த ராமிரெஸ்வா, அத்தகவல்களிலிருந்து சிலையின் சிற்பி மானுவேல் பால், எழுதிய காலம் பதினேழாம் நூற்றாண்டு என்பதையும் கண்டுபிடித்துள்ளார். நிலநடுக்க காலத்தின்போது மக்களுடைய நிலைமையை விளக்கிய இந்த எழுத்துக்களை இன்னும் நெருக்கமாக ஆராய ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.  
2
கோடிங் ராணி!

அமெரிக்காவில் நியூயார்க்கில் பிறந்த கிரேஸ் ஹாப்பர் பலராலும் மறக்கப்பட்ட கம்ப்யூட்டர் வல்லுநர். முதல் உலகப்போரின்போது கப்பல் பணியில் சேர்ந்தவர், இரண்டாம் உலகப்போர் காலங்களிலும் கணினிகளில் அயராது பாடுபட்டார்.

1947 ஆம் ஆண்டு ஹார்ட்வர்ட் மார்க் 1&2 கணினியில் ஏற்படும் ப்ரோகிராம்களை சிக்கல்களை கண்டறிந்து புகழ்பெற்றார். இதன்பின்தான் 'கம்ப்யூட்டர் பக்' என்ற வார்த்தை பிரபலமானது. கோபால் ப்ரோகிராமின் அடிப்படை விஷயங்களை கட்டமைத்து மேம்படுத்தி, இன்றைய சிக்கலான கணினி அமைப்புகளை உருவாக காரணமான வல்லுநர் கிரேஸ் ஹாப்பர். அமெரிக்க கடற்படையில் பணியாற்றி கிலோ கணக்கிலான கம்ப்யூட்டர் சிக்கல்களை களைந்த கிரேஸ், தன் 79 வயதில் ரிடையர்ட்மென்ட் பெற்றது யாருக்கும் கிடைக்காத சலுகை. இருபது ஆண்டுகளுக்கு பிறகு கடல்பணியை விட்டு விலகியவர், 1991 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் கௌரவ விருதை வென்றவர்.    

3

வைட்டமின் பி7 மாத்திரை!

வைட்டமின் பி7 மாத்திரைகளை சாப்பிடும்போது, அவை மருத்துவ சோதனைகளில் பல்வேறு தவறுகளையும், நாளடைவில் இறப்பு ஏற்படுத்துவதாகவும் அமெரிக்காவின் எஃப்டிஏ அறிக்கை தெரிவித்துள்ளது.

முடி,தோல்,நகம் ஆகியவற்றை மேம்படுத்தும் மல்டி விட்டமின், சப்ளிமெண்ட்டுகளில் காணப்படும் வைட்டமின்களே பயோடின்(வைட்டமின் B7,H). இம்மருந்து உடலில் ஹார்மோன் அளவை திடுக்கென உயர்த்தி மாரடைப்பு உள்ளிட்ட சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. தினசரி பயோடினை 0.03 மி.கி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சில மருந்துகளை உண்ணும்போது, அவை 20 மில்லிகிராம் அளவு பயோடினை உடலில் செலுத்துகிறது(தினசரி அளவை விட 650 மடங்கு அதிகம்). 40% லேப் டெஸ்டுகளை பயோடின் மற்றும் அதிலுள்ள ஸ்ட்ரெப்டாவிடின் என்ற புரதம் பாதிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
span>


4
வானிலை செயற்கைக்கோள்கள்!

1960 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவினால் ஏவப்பட்ட TIROS(Television Infrared Observation Satellites) பின்னாளில் ஏவப்பட்ட போலார் ஆர்பிட் செயற்கைக்கோள்களுக்கு முன்னோடி. கீழ்வட்டப்பாதையில் சோதனை முறையில் ஏவப்பட்ட முதல் வானிலைச் செயற்கைக்கோள் இது.

1964 NIMBUS
இரண்டாம் ஜெனரேஷனில் வானிலைச்சூழலைக் கணிக்க உதவிய செயற்கைக்கோள் இது. 20 ஆண்டுகள் இயக்கத்திலிருந்த இச்செயற்கைகோளின் தகவல்களை நாசா மற்றும் NOAA ஆகிய அமைப்புகள் பயன்படுத்தின.

1966 ATS(Application Technology Satellite)

பூமியை நெருக்கமாக புகைப்படம் எடுத்து உடனடியாக பூமியிலுள்ள ஸ்டேஷன்களுக்கு அனுப்பிய செயற்கைக்கோள் இது. 1967 ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் பூமியை முதன்முறையாக வண்ண புகைப்படம் எடுத்தது.

2017 JPSS(Joint Polar Satellite System)
மேலே சொன்ன அத்தனை செயற்கைக்கோள்களுக்கும் ஓய்வு கொடுத்த செயற்கைக்கோள் சிஸ்டம் இது. வேகம்,துல்லியம் ஆகிய இரண்டிலும் கில்லியானவை JPSS சாட்டிலைட்டுகள்.

5

கிரியேட்டிவ் பரிசுகள்!


Apple Ipad pro
ஆப்பிளின் பொருட்கள் அனைத்துமே கிரியேட்டிவ் ஆட்களுக்கான காஸ்ட்லி ஐட்டங்கள்தான். எழுத,வரைய,இசையமைக்க சூப்பராக ஆப்ஸ்கள் மூலம் உதவுகிறது ஐபேட் புரோ. விலை ரூ.41,623

Rhodia Notebook

டிஜிட்டல் சாதனங்கள் நம் வீட்டை நிறைத்தாலும் கோடுபோட்ட நோட்டில் எழுதுவது போல் வருமா? எனவே நீட்டான ஸ்பைரல் ரோடியா நோட்டில் கதை,கவிதை,படம் ஏன் படத்திற்கான திரைக்கதை கூட எழுதி ஊரை மிரட்டி ஜமாய்க்கலாம். விலை ரூ.705

Etymotic Research ear Phones

இசையை திருவிழா கோன் ஸ்பீக்கர்களிலும் கேட்கலாம்தான். ஆனால் ஆல்டர் செய்யாத ஒரிஜினல் இசையைக் கேட்க இடிமோடிக் இயர்போன்கள் கட்டாயம் தேவை. Bass,Treble அம்சங்களை கட்டற்று கேட்டு ராகம் கெடாமல் தாளம் போட உதவுகிறது. விலை ரூ. 22,383

Roli song maker


வாத்தியங்களை மீட்டி இசை உருவானது பாகவதர் காலம். இன்று அனைத்தும் சாப்ட்வேர்கள் வழிதான். ரோலி சாங்மேக்கரில் துல்லிய ஒலி,எஃபக்ட்ஸ் என தனி ரூட் பிடித்து அசத்துகிறது. விலை ரூ. 38,481 

தொகுப்பு: பிலிப் கார்லி, வின்சென்ட் சார்லி
நன்றி: முத்தாரம்