செருப்பு, உள்ளாடை, கொலை - முன்னேற்றம் கண்ட ஜெர்ரி!


Jerry Brudos







ஜெர்ரி ப்ரூடோஸ்


சிறுவயதிலிருந்து மனதில் உருவாகும் ஆசைதான் ஒருவரின் ஆளுமையை வளர்க்கிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்திலுள்ள போர்லாந்தில் வாழ்ந்த ஜெர்ரியின்ஓரே ஆசை செருப்புகளை சேகரிப்பது. அதுவும் ஹைஹீல்ஸ் என்றால் குப்பைத்தொட்டியில் இருந்தாலும் சேகரித்து வைப்பார். எப்போது தொடங்கிய ஆசை தெரியுமா? அவருக்கு ஐந்து வயது இருக்கும். அப்போதே நடந்து செல்பவர்களை விட அவர்களின் கால்களை அலங்கரிக்கும் கால்களிலேயே ஜெர்ரியின் பார்வை நிலைகொண்டிருந்தது. அச்செருப்புகளை தானே வைத்துக்கொள்ள விரும்பினாலும் அதனை எப்படி கேட்டுப் பெறுவது என சிறுவன் ஜெர்ரிக்கு தெரியவில்லை. தனது ஆசையை நிறைவேற்ற குப்பைத்தொட்டியில் தேடினான். ஆச்சரியமாக அவன தேடியது கிடைத்தது. ஆம் செருப்புதான்.

ஆனால் ஜெர்ரி அதோடு நிற்கவில்லை என்பதுதான் பிரச்னை. செருப்பு, உள்ளாடைகள் எனத் தொடங்கிய பயணம் இறுதியில் அவரின் மரணத்தில் வந்து நின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வயதாக வயதாக அவரின் செருப்பு தேடும் ஆர்வமும் வளர்ந்தது. இம்முறை அதிகமாக எல்லை மீறியே சென்றுவிட்டது. அருகிலிருந்து குடியிருப்புகளுக்கு சென்று காலிங்பெல் அடித்து, கதவைத் திறக்கும் பெண்ணின் கழுத்தை நெரித்து..... வேறு கில்மா கற்பனைகள் வேண்டாம். மயக்கமாக்கிவிட்டு ஹை ஹீல்ஸ் செருப்புகளை திருடிக்கொண்டு வந்துவிடுவார். ஆனால் பதினேழு வயதில் ஒரு பெண்ணை கத்தி முனையில் மிரட்டி இழுத்துச் சென்றார். எதற்கு? செக்ஸ் அடிமையாக்கி அனுபவிக்கத்தான். ஆனால் கிறுக்கி மகள், போலீசில் புகார் கொடுப்பாள் என ஜெர்ரி எதிர்பார்க்கவில்லை. இவரின் மனநிலை , அறிகுறிகளைப் பார்த்துவிட்டு மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை செய்ய நீதிம்ன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிகிச்சை எந்த பலனையும் தரவில்லை.

பின்னர், ஜெர்ரிக்கு திருமணமானது. அவர் தனது குடும்பத்தையும் தான் வேலை செய்யும் தரை தளத்தையும் தனியாக பிரித்து வைத்திருந்தார். குழந்தைகள் பிறந்தனர். ஜெர்ரியின் பாலியல் ஆசையும் நைல் ந்தி நீளத்திற்கு சென்று கொண்டிருந்தது. தன் மனைவியிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைத்தார். அவர் வீட்டு வேலைகளை தன் முன் செய்யும்போது உள்ளாடை அணிய இல்லையில்லை நிர்வாணமாக இருக்கவேண்டும் என்றார். மனைவி திகைத்துப் போனார். பின்னர் கணவரின் ஃபேன்டஸி போல என்று ஒப்புக்கொண்டார்.

இரண்டு ஆண்டுகள் ஜெர்ரி கொலை செய்தார். பெண்களை கடத்துவது, பின்னர் அவர்களைக் கொன்று அவர்களின் உடலின் ஆடையை இவர் அணிந்து விளையாடுவது,  அவர்களின் உடல் ஆடையை மோல்ட் செய்து பேப்பர் வெயிட் உருவாக்குவது என ஜெர்ரியின் பொழுதுபோக்கு திகீர் லெவலில் செல்லும்.

முதலில் என்சைக்ளோபீடியா விற்க வந்த லிண்டா ஸ்லாசன் 19, கல்லூரிப் பெண் ஜான் வொயிட்னி 23, கரன் ஸ்பிரிங்கர் 19, லிண்டா சாலி ஆகிய பெண்களை கடத்தினார். வல்லுறவு செய்தார். பின்னர் அவர்களைக் கொன்று ஆணியில் உடலைத் தொங்கவிட்டார். பின்னர், அவர்கள் கால் அல்லது மார்பகங்களை அரிந்துகொண்டு உடலை அருகிலுள்ள ஏரியில் தூக்கி எறிந்தார்.


போலீஸ் மெல்ல வழக்கைத் துப்புதுலக்கத் தொடங்கி ஜெர்ரியை அடையாளம் கண்டு கொண்டது. ஜெர்ரி, கடமையில் சற்றும் மாறாமல் இருந்தார். எனவே, கடத்தி வந்தவர்களுடன் பல்வேறு சித்திரவதை நிலைகளில் எடுத்த புகைப்படங்களைக் கூட வீட்டில் வைத்திருக்க முடியுமா? கூடவே பெண்களின் உடல் உறுப்புகளையும் கைப்பற்றியது போலீஸ். அப்புறம் என்ன ஜெர்ரி மீது குற்றம் சாட்டி சிறையில் தள்ளினர். மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று சிறையில் இறந்துகிடந்தார் ஜெர்ரி.
இயற்கையான காரணத்தால் இறந்தார் என்றது சிறை நிர்வாகம். யாருக்குத் தெரியும் நடந்த விஷயம் என்னவென்று?


தொகுப்பும் எழுத்தும் வின்சென்ட் காபோ

நன்றி - லஸ்ட் கில்லர்

தாட்கோ.காம்











பிரபலமான இடுகைகள்