வண்டி ஓட்டும்போது ஆவேசம் ஏன்?




Animated GIF



மிஸ்டர் ரோனி

வண்டி ஓட்டும்போது ஆவேசம் ஏற்படுவது ஏன்?

சிக்னலை நான் இன்று இரண்டு நொடி தாமதத்தில் கடந்தபோது, ஆக்டிவா பயனர் எனது தாயைப் பழிக்கும் சொல்லை மிக வேகமாக சொல்லிச்சென்றார். ஹாரிஸின் தொடக்க வரிகளைப் போல நிதானமாக யோசித்தபோதுதான் என்ன சொன்னார் என்றே எனக்கு அர்த்தமானது.

வைல்ட் டேல்ஸ் என்ற படத்தில் சொகுசு காரில் செல்பவரை, டிரக் கார் வைத்திருப்பவர் கிண்டல் செய்வார். உடனே அதற்கு சொகுசு கார் வைத்திருப்பவர் டென்ஷன் ஆவார். இருவரும் ஒருவரையொருவர் கொல்லத் துரத்துவார்கள். இறுதியில் இருவரும் விபத்துக்குள்ளாகி இறப்பார்கள். இருவரும் நண்பர்கள் கிடையாது. ஆனால் ஒரு சின்ன சம்பவம். ஈகோவுக்கு ஆபத்தாக, சண்டை தொடங்குகிறது.

பைக், கார் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக கிளம்புவதில்லை. காரணம், வண்டி இருக்கிறது. அழுத்திப் பிடித்தால் தாமதமான நேரத்தை எட்டிப்பிடித்துவிடலாம் என்ற பேராசை, மூர்க்கத் துணிச்சல். இதனால்தான். எந்த வண்டியில் பீக் அவரில் கூட வெள்ளைக் கோட்டிற்கு பின்னால் நிற்பதில்லை. அனைத்திலும் முந்தி என தினத்தந்தியின் டேக் லைன் போல அவசரப்படுவதுதான் இதில் பிரச்னையாகிறது. பைக், கார், சைக்கிள் என ஓவ்வொருவருக்கும் ஈகோ அவர்களின் வண்டி அளவுக்கு தீவிரமாக இருக்கிறது. இதனால்தான் தலைமுறையை ரோட்டில் இழுத்துப்பேசிவிட்டு வண்டியை ஓட்டிச்செல்வது. இதனை மாற்ற முடியாது. உங்களுக்கே சில நாட்களில் பழகி விடும்.  

பிரபலமான இடுகைகள்