ரத்தம் தெறிக்கும் புல்லட் பறக்கும் ஆக்சன் ! - வார் படம் எப்படி?
வார்
இயக்கம் - சித்தார்த் ஆனந்த்
ஒளிப்பதிவு - பெஞ்சமின் ஜாஸ்பர்
இசை - விஷால் - சேகர்
பின்னணி - பல்காரா சகோதரர்கள்
தேசபக்தி படம். ராணுவ உளவுத்துறையில் பணியாற்றும் கபீர். தனது வேலைக்காக தன்னையே தியாகம் செய்யத் தயங்காதாவர். ஆனால் அவரால் இலியாசி, ஹக்கானி எனும் தீவிரவாதிகளை மட்டும் பிடிக்க முடியவில்லை. உள்ளே இருந்து காட்டிக்கொடுக்கும் துரோகிகள் யாரென்று அவருக்கு தெரியவில்லை. அப்போது பார்த்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவரின் மகன் காலித் அவரின் டீமில் சேர வருகிறார். அவரை சேர்த்துக்கொள்ள கபீர் மறுக்கிறார். அதற்கு என்ன காரணம், இருவரும் இணைந்து தீவிரவாதிகளை புரட்டி எடுத்தார்களா? துரோகி யார்? என்பதைத்தான் படம் பல்வேறு நாடுகளுக்கு பரபரவென சென்ற சேசிங் செய்து சொல்லியிருக்கிறது.
தேறியது
கட்டுடல் மன்னன் ரோஷன், அதற்கு சளைக்காத டைகர் ஷெரஃப். மற்றபடி பிற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. காதலித்தவன் தன்னை பயன்படுத்திக்கொள்கிறான் என்று தெரிந்தவுடன் வாணி கபூர் சிந்தும் கண்ணீர்த்துளிக்காக அவர் நடிக்கிறார் என்பதை ஏற்கலாம். பின்னணியும், பாடல்களும் பரவாயில்லை. சிவசங்கர் பாடல் ஹீரோவின் மனவேகத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். என்ன வேகம்.... ஒளிப்பதிவு சேசிங்கிற்கு நன்றாக ஈடுகொடுக்கிறது.
வேலைக்கு ஆகாது!
இரு கதாபாத்திரங்கள் தவிர பிற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. உளவுத்துறை தலைவர் பருப்புக்குழம்பு சாப்பிட்டியா, நெய் சேர்த்து சாப்பிடுப்பா என்பது போல பேசுவது எரிச்சலூட்டுகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி முகத்திற்குத்தான் முழு இடம்பிற்கு கிடையாது. இம்முறையில் சௌரப்பை எளிதாக ஒருவர் கண்டுபிடிக்க முடியுமே? காட்சிகளாக பார்த்த விஷயங்களை திரும்ப வசனங்களாக சொல்லும் கடித்தனங்கள் நிறைய இடங்களில் உண்டு.
கபீர், குழந்தை ரூஹியை சந்திக்க காலித் வருகிறான். அங்கு கபீர் தேவையின்றி எப்படி கண்டுபிடிச்சே என்கிறான். அடுத்து, கபீருக்கு விஷம் கொடுத்து கொன்ற மிதப்பில் செளரப்,பிரம்மா செயற்கைக் கோளை இலியாசியுடன் சேர்ந்து அழிக்க ஏவுகணை அனுப்புகிறான். அங்கு வரும் கபீரை, உண்மை தெரிஞ்சவுடனே போட்டிலேயே கொன்னு இருக்கலாமே என்கிறான்.
தேசபக்தியோடு முஸ்லீம்களும் நாட்டின் ராணுவத்தில் பங்கேற்கிறார்கள். உழைக்கிறார்கள் என்று சொன்னது சந்தோஷம். இன்று இப்படி காட்சிகளை யாரும் வைப்பதில்லை. சித்தார்த் ஆனந்திற்கு வாழ்த்துகள்.
ஆக்ஷன் பிரியர்களுக்கான படம்.
கோமாளிமேடை டீம்