மன அழுத்தம் போக்கும் விட்டமின்கள்!
ரோடியோலா ரோசியா
ஆசியா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விளையும் மூலிகை. உடலில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்க்கிறது.
உறக்கமின்மை பாதிப்பு கொண்ட நூறு பேரிடமும் இரண்டு மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. ரோசியாவின் மூலக்கூறு கொண்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நல்ல பயன் கிடைத்தது. உடலில் ஏற்படும் பதற்றம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் இவை பயன்தருகின்றன. இதனை 400 மி.கி எடுத்துக்கொண்டால் பயன் தெரியும்.
மெலடோனின்
தூக்கம் வருவதற்கான ஹார்மோன். சூரிய வெளிச்சம் குறைந்து இருள் பரவும்போது உடலில் சுரக்கும் ஹார்மோன் இது. இதனை உடல் உற்பத்தி செய்வதால், நாம் மாத்திரைகளாக சாப்பிட்டாலும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாத வரையில் பெரியளவு பயன்களை பெற முடியாது. 0.3 முதல் 10 மி.கி வரையிலான மாத்திரைகளாக இதனை வாங்கி சாப்பிடலாம். இது தற்காலிகமான தீர்வுதான் என்பதை மறக்காதீர்கள். இம்மாத்திரைகள் வாங்க மருத்துவரின் ஆலோசனையும், மருந்து சீட்டும் முக்கியம்.
கிளைசைன்
3 கி. அளவில் கிளைசைன் எடுத்துக்கொண்டால் இரவுத்தூக்கத்தின் தரம் உயர்வதோடு, பகலிலும் வாயைப் பிளந்து கொட்டாவி விடும் அசௌகரியம் ஏற்படாது. கிளைசைன் என்பது நம் உடலில் உருவாகும் அமினோ அமிலம்தான். புரத த்தை உருவாக்குவதற்காக உடல் இதனை உருவாக்குகிறது.
அஸ்வகந்தா
ரோடியோலா போல செயல்படும் தன்மை கொண்ட மூலிகை இது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. 600 மி.கி. அஸ்வகந்தா மாத்திரைகளை அறுபது நாட்களுக்கு நீங்கள் சாப்பிட்டால், காலையில் உடலில் உருவாகும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் பிரச்னை இருக்காது.
எல் தீனைன்
தேயிலை இலைகளில் காணப்படும் அமினோ அமிலம் இது. உலகம் முழுக்க 68 ஆயிரம் பேர்களிடம் க்ரீன் டீ கொடுத்து பதற்றம் தணிக்கிறதா என்று 21 ஆய்வுகள் நடத்தப்பட்டன. பொதுவாக டீ பேக் ஒன்றில் 20 மி.கி. எல் தீனைன் அமினோ அமிலம் உள்ளது. அதற்காக டீயை வாங்கி ஊதி குடித்துக்கொண்டே இருக்காதீர்கள். உடலின் உள்ள நீர் வேகமாக வெளியேற்றம் அடையும் பாதிப்பு ஏற்படும். குறைவான நிறைவாக குடியுங்கள். க்ரீன் டீ என்பதால் காசு கொஞ்சம் அதிகமாக இருக்கும். பார்த்து பட்ஜெட் போட்டு வாங்கிக் குடியுங்கள்.
பி காம்ளெக்ஸ் மாத்திரைகள்
இவை உடலில் செரிமானம் சரியானபடி நடந்து, ஆற்றல் உடலால் உட்கிரகிக்கப்பட பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்கள் உதவுகின்றன. தானியம், பால் பொருட்கள், இறைச்சி ஆகியவற்றில் பி காம்ளெக்ஸ் விட்டமின்கள் உதவுகின்றன.
உடல்பருமன், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.
தெற்கு பசிஃபிக் பிராந்தியங்களில் மக்கள் அருந்தும் காவா பானம் மன அழுத்தத்தைப் போக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள காவாலாக்டோன் இந்த திறனுக்குக் காரணமாக உள்ளது.
நன்றி - ஹெல்த்லைன்