வித்தியாசமான போபியாக்கள்! - பயம்தான் பிரதானம்
பாபாபோபியா
இது கத்தோலிக்க மத தலைவரான போப்பை பார்த்தால் வரும் பயம். பெண்களுக்கு வருமா? ஆண்களுக்கு வருமா என்று தெரியவில்லை.
சோசெராபோபியா
பெற்றோரைப் பெற்றவர்களைப் பார்த்து வரும் பயம். தாத்தா, பாட்டியைப் பார்த்து வரும் பயம் என்றால் ஈசியாக புரியும் என நினைக்கிறேன்.
சோம்னிபோபியா
தூங்கிவிடுவோமோ என நினைத்து பயப்படுவது. அனிமேஷன் படிப்பவர்களுக்கு வரும் வியாதி இதுதான் என இப்போது தெரிகிறது.
சாந்தோபோபியோ
நிறங்களைப் பார்த்து மனதில் ஏற்படும் குலை நடுக்கத்தை இப்படி சொல்கிறார்கள்.
ஆம்பலோபோபியா
சென்டர் ஆப் தி அட்ராக்சனைப் பார்த்து வருவது. அதுதாங்க, தொப்புளைப் பார்த்து வருவது.
ஹீலியோபோபியா
சூரியன், வெளிச்சம், எல்இடி பல்புகளை பார்த்து ஒருவர் ஜகாவாங்கினால் அவருக்கு இந்தப் பிரச்னை என புரிந்துகொள்ளலாம்.
அராய்ச்சி புட்டிரோ போபியா
பீநட் பட்டர் சாப்பிடும்போது வாயின் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளுமோ என பயப்படும் பழக்கம். நம்மூரில் இதனை பிரெட்டும் ஜாமும் என்று கூட மாட்டிக்கொள்ளலாம். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது அப்படியே அள்ளித் தின்னும் ஹார்லிக்ஸ்.
டிரைபோபோபியா
சிறிய துளைகளைப் பார்த்து வரும் பயம் இது.
நன்றி - சைக்காலஜி நவ் இதழ்