வேலை வாய்ப்புச் சந்தை மாறி வருகிறது - நீங்களும் மாறுங்கள்!




வேலைவாய்ப்புச்சந்தைகள் இப்போது மாறிவருகின்றன. முதலில் லிங்க்டு இன்னில் புரபைல் பதிந்து வேலை தேடியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.இன்று நொடியில் வேலைக்கு தகுதியானவர்களா இல்லையா என அறிய டிண்டர் ஆப்பை போலவே புதிய ஆப்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப்படி பல ஆப்கள் உள்ளன. இனிமேலும் நீங்கள் நாக்ரி.காமில் பதிந்து வைத்தேனே அதெல்லாம் வீணா என்றால் வாழ்க்கை மொத்தமும் வீணாகிவிடும். ஆட்டோமேஷன் உலகில் கிடைக்கும் வேலை எவ்வளவு முக்கியம் தெரியுமா?   ஜாப்பர், பிளாங்க். ஸ்விட்ச், வேவ், ஷேப்பர் எனும் ஆப்களை இன்று மனிதவளத்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அதனால் இனி சிபாரிசுகளை விட உங்களுக்கு தகுதிதான் முக்கியமாகப் போகிறது.

ShaprMockup-1068x670

டிண்டர் என்பது ஜாலியான டேட்டிங் ஆப். அதற்கும் வேலைக்கும் வித்தியாசம் இல்லையா என சிலர் கேட்கலாம். உண்மைதான் டெக் ஆட்கள் புரிந்துகொண்டது அதன் இடைமுக எளிமைத்தன்மையை மட்டுமே. எளிமையாக சில கம்பெனிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை ஸ்வைப் செய்து அந்த நிறுவன ஹெச் ஆர் ஆட்களிடம் ஆப் லைனில் பேசலாம். அவர்கள் தேடிய ஆட்களில் நீங்களும் ஒருவர் என நம்பிக்கை தோன்றினால் நீங்கள் அடுத்த முப்பது நாட்களில் அங்கு இருப்பீர்கள். இல்லையெனில் அடுத்த கம்பெனியைப் பார்க்க வேண்டியதுதான்.

மேற்சொன்ன நிறுவனங்கள் பெரும் நிறுவனங்கள் அல்ல. வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான். அவற்றில் இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களை பதிந்துகொண்டு ஆட்களை தேடி வருகின்றன. ஆக வேலைகள் உண்டு. அதனை தேடிப் பெறுவதற்கான வாய்ப்புகள் முறைகள் மாறியுள்ளன. நீங்கள் அதனை புரிந்துகொண்டால் வேலைவாய்ப்புகளை எளிமையாக பெறலாம். தினசரி இந்த நிறுவனங்களில் 2500க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் வேலை விவரங்களை பதிவு செய்கின்றனர்.

டிண்டர் இடைமுகம் போல எளிமை என்பதை மட்டுமே இந்த நிறுவனங்கள் பிளஸ் பாய்ன்டாக எடுத்துக்கொண்டுள்ளன. பிற விஷயங்கள் வேறு. அதாவது, அல்காரிதம் போன்றவை. எனவே இனியும் போன் செய்வார்கள் என ரெஸ்யூமை ஆபீஸ் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு காத்திருக்க அவசியமில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் நேராக பேசி ஆமாவா, இல்லையா எனக் கேட்டுவிடலாம்.

நன்றி - OZY -