இணையம் என்பது ஜனநாயக பூர்வமாக மக்களுக்கானதே! - வின்ட் செர்ஃப்
நேர்காணல்
வின்ட் செர்ஃப்
இணையம் அமெரிக்காவின் ராணுவத்தின் மூலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இணைய இணைப்பின் மூலம்தான் வெப் உருவாக்கப்பட்டது. எனவே இதில் குழம்பி நிற்கவேண்டாம். இப்போது இணையத்தின் மூலம்தான் நாம் அனைத்து விஷயங்களையும் பெறுகிறோம். வாழ்கிறோம். செய்திகளை பகிர்கிறோம்.
அலுவலகப் பணிகளையும் பலர் இனி க்ளவுட்டில்தான் செய்யமுடியும். மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான சேவைகளையும் தொடங்கிவிட்டனர். எனவே கணினி என்பது டைப் செய்வதற்கான கீபோர்டு, சுட்டுவதற்கான மௌஸ் மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. வன்தகடு என்பது மிக குறைவாக இருந்தாலே போதும். அனைத்தையும் நாம் இணையத்தில் சேமித்துக் கொள்ள முடியும்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வின்ட் செர்ஃப், படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 26. தகவல் பாக்கெட்டுகள் பற்றிய இவரும், ராபர்ட் கானும் சேர்ந்து உருவாக்கினர். டிசிபி , ஐபி எனும் புரோட்டோகால்களை உருவாக்கி ஆட்கள் இவர்கள். இன்றும் கூகுளுக்கான ஆலோசகர்களாக உள்ளனர்.
உங்களை இணையத்தின் தந்தை என்கிறார்களே?
உண்மையில் இப்படி அழைக்கப்படுவது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி. 1973ஆம் ஆண்டு நானும் ராபர்ட் கானும் ராணுவத்திற்காக ஆராய்ச்சிகளை செய்து வந்தோம். கணினிகள் தமக்குள் செய்திகளை எப்படி பகிர்ந்துகொள்கிறது என்பதுதான் எங்களுக்கான தேடலாக இருந்தது. இதற்காக சில புரோட்டோகால்களை கண்டுபிடித்து அதனை சாதித்தோம். தொலைபேசி, செயற்கைக்கோள், ரேடியோ தகவல்தொடர்பு இவற்றை கணினியோடு இணைக்கவேண்டும் என்பதுதான் எங்களுக்கு கொடுத்த வேலை. ஏர் கண்டிஷ்னர் அறைகளில் உட்கார்ந்து இயந்திரங்களோடு போராடி அதனை செய்தோம்.
நீங்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் சக்தியை உணர்ந்து இருந்தீர்களா?
இல்லை. நாங்கள் இருவரும் கண்டுபிடித்த தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளும் என்பது எங்களுக்கு தெரியும். எதிர்காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளே இணைத்துக்கொள்ளும் என்று முதலில் நம்பவில்லை. மக்களையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே எனக்கு போதுமானதாக இருந்தது.
இணையம் மக்களுக்கானது என்கிறீர்கள். இன்றும் பெரிய நிறுவனங்கள்தானே அதனைக் கையில் வைத்திருக்கிறார்கள்?
குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் பொருளாதாரம் சார்ந்தது. ஆம் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை கையகப்படுத்திவிட்டன. சீனாவில் அரசின் கட்டுப்பாட்டையும் மீறி அலிபாபா வெளிவந்துவிட்டது இல்லையா? அமெரிக்காவில் ஏஓஎல், யாஹூ போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம். போட்டி அதிகரிக்கும்போது மக்கள் பயன்படுத்தும் இணையத்திற்கான கட்டணம் குறையும்.
இணையத்தை சிலர் பயன்படுத்தலாம், சிலர் பயன்படுத்தக்கூடாது என்ற சூழல் உருவாகியுள்ளதே?
அது தவறானது. அரசு அப்படி தடை விதித்தாலும் தவறு என்றே கூறுவேன். அரபு வசந்தம் நிகழ்ச்சியின்போது, சமூகவலைத்தளங்கள் மக்களைத் திரட்ட பெரும் பங்காற்றின. இதைப்போலவே இன்று பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கு இடையே பேசிக்கொள்ள ரகசியமான பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் இணையம் மூலமாக நடைபெறுகிறது. இதனை தடுக்க அரசு முயற்சிக்கும்போது, இணையத்தை குறிப்பிட்ட பகுதியில் முழுமையாக முடக்குகிறது. அவர்கள் பேசிக்கொள்வது அரசுக்கு அச்சுறுத்தல் எனும்போது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் மக்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதே முக்கியம்.
நன்றி - நியூ சயின்டிஸ்ட் - ரிச்சர்ட் வெப்.