உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் இந்தியப் பெண்கள்!



Women Gender GIF by PRI
giphy.com



உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் பெண்கள்!


  இந்தியாவில் உயர்கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் AISHE ( All India Survey on Higher Education (AISHE)) ஆய்வுகள் கூறுகின்றன.

இந்திய அரசு 2012 ஆம் ஆண்டு முதலாக உயர்கல்வித்துறையில் இணையும் மாணவர்களின் சேர்க்கை பற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகிறது.  அரசின் மனிதவளத்துறை இந்த அறிக்கை தயாரிப்பு பணியை ஏற்றுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான  உயர்கல்வி சேர்க்கை பற்றிய தகவல்களை அரசு வெளியிட்டுள்ளதில்  பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி.

உயர்கல்வியில் சேர்ந்த 3.74 கோடிப் பேரில் 1.92 கோடி மாணவர்களும்,  1.82 கோடி மாணவிகளும்  உள்ளனர்.  2011-12 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மாணவிகளின் எண்ணிக்கை 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உயர்கல்வியில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. உயர்கல்வியில் ஆண், பெண்களுக்கான பாலின இடைவெளி முன்னர் 0.88 சதவீதம் என்ற அளவிலிருந்து இன்று 1.0 சதவீதம் அளவுக்கு மாறியிருக்கிறது. ஒப்பீட்டில் 5 ஆயிரம் ஆண்கள் ஆண்டுதோறும் உயர்கல்விக்கு வருகிறார்கள் என்றால் தற்போது பெண்களின் பங்கு அதில் 7.5 லட்சம் என்று அதிகரித்து வரும் சதவீத அளவைக் கணக்கிட்டு கூறலாம்.

நடப்பு கல்வியாண்டில் மாணவிகளின் சேர்க்கை சதவீதம் 26.3 என அதிகரித்துள்ளது பற்றி நிச்சயம் நாம் பெருமைப்படலாம்.  உயர்கல்வியை முடித்து பட்டதாரிகளாக வெளிவருபவர்களில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்றுள்ளது.  தேசிய அளவில் உயர்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கை 90 லட்சமாக உள்ளது. உயர்கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 8.4 லட்சம் மாணவர்களைப் பெற்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்குவதில் உத்தரப்பிரதேசம் முதன்மை மாநிலமாக உள்ளது. அதிலும் பட்டதாரிகளில் பாதிக்கும் மேல் பெண்கள் என்பது பெருமைதானே! பீகார் இப்பட்டியலில் 13.6 சதவீதம் பெற்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

ஆண், பெண் பேதமின்றி கல்வி கற்பது அடிப்படையானது. இதன்பின்னர் அவர்கள் பெறும் வேலைவாய்ப்பு நாட்டையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும்.

தகவல்: financial express

நன்றி - தினமலர் பட்டம்


பிரபலமான இடுகைகள்