வெப்பத்தை மூளை எப்படி உடனே உணர்ந்துகொள்கிறது?
giphy.com |
மிஸ்டர் ரோனி
வேறு எந்த உணர்ச்சிகளை விடவும் உடலில் சூடு பட்டவுடன் எப்படி வேகமாக உணர்கிறோம்?
சூடு பற்றிய தகவல் மூளைக்கு 27 மில்லி செகண்டுகளில் சென்று சேர்ந்துவிடும். நம் கைகளில் நொடிக்கு 50--60 மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். ஸ்டவ்வில் நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால், நாம் முடிவெடுத்து கையை எடுப்பதற்குள் கை வெந்துவிடும். இதற்காகவே, உடலின் இயல்பான பாதுகாப்பு அமைப்பு சூடு, குளிர்ச்சி என்பதை உடனே உணர்ந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும். இதனை மோட்டார் இயக்கம் எனலாம். சட்டை பட்டன் போடுவது, ஆணிகளை திருகிப் பொறுத்துவது போன்றவை இதில் அடங்கும். இவை முதுகெலும்போடு இணைந்துள்ளன. அனைத்து விவகாரங்களிலும் மூளை முடிவெடுத்தால் நாம் உயிர் வாழ முடியாது. எனவே சில விஷயங்களில் உடல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். எதற்காக, தன்னைக் காத்துக்கொள்ளத்தான்.