உண்மையை விசுவாசியுங்கள் இந்தியர்களே! - சேட்டன் பகத்
எங்களைக் காப்பாற்றுவதாக கூறும் அரசியல்வாதிகளே, சமூக ஆர்வலர்களே உங்கள் அனைவரின் நோக்கத்திற்காக உங்களை வணங்குகிறேன்.
நாங்கள் அணிந்துள்ள தொப்பி உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாங்கள் கலவரத்தில் பட்ட காயங்கள், அதில் எங்களை ஈடுபடுத்திய உங்களது குற்றவுணர்வு நழுவாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தியா ஜனநாயகப்பூர்வ குடியரசு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பான்மையினருக்கு அதே நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை.
வாக்குவங்கிக்காக பல்வேறு இனக்குழுக்களை நாட்டின் விரோதிகளாக முன்னே நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர்களின் வாட்ஸ் அப் கூட இன்று உளவு பார்க்கப்படுகிறது. நல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்தானே? கல்வி, தொழில் என அனைத்திலும் நாங்கள் இன்று பின்தங்கவில்லை. பெரும்பான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு நிகராக நாங்களும் வளர்ந்துள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு, நண்பர்களின் ஆதரவு ஆகியவை பின்னணியாக உள்ளன.
என்னை நீங்கள் இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள். பாஷா, அப்துல்லா, சாதிக் அலி, சித்திக் அலி, நிஜாமுதீன் என ஏதாவொரு பெயரை வைத்துக்கொள்ளலாம். இப்போது சமணரான வள்ளுவர் கூட ஸ்படிக மாலை அல்லது ருத்ராட்சம் போட்டு திருச்சின்னங்களை உடலில் இட வேண்டி இருக்கிறது.
நாங்கள் எங்கள் உடலில் சாப்பிடும் உணவுக்காக பல வசைகளையும், கசையடிகளையும் சுமக்கவேண்டி உள்ளது. இதை நீங்காமல் மாற்ற எங்களுக்கு உதவினால் போதும். ஆனால் நீங்கள் எங்களுக்காக போராடுகிறோம் என்று சுயநலத்தை ஒளித்து வைத்து முன்னே நின்று பெருந்தன்மை காட்டுகிறீர்கள். இது நியாயமா?
எங்கள் மதத்திலும் முன்னேறிய ஆட்கள் உண்டு. தொழில்முனைவோர், சினிமா நட்சத்திரங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உண்டு. அவர்களும் அரசை மட்டுமல்லாது தங்களை நம்பி கடினமான சூழலை வென்று வந்தவர்கள்தான்.
சிறுபான்மையினர் என்பதற்காக எங்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை மனதில் ரசித்துக்கொண்டு வெளியில் போராடுவதாக நடிக்காதீர்கள். அந்த போலித்தனத்தை வெகு நாட்கள் நீங்கள் கைக்கொள்ள முடியாது. காரணம் அதில் நிஜமில்லை. நாங்கள் அணியும் தொப்பி எங்களை பொது சமூகத்திலிருந்து பிரிக்கவில்லை. நீ வேறு , நான் வேறு என்று எண்ணும் எண்ணம் கொண்ட மூளைதான் பிரச்னை. இதயம் பிரச்னையில்லை. இதயம் வழியாக எங்கள் பிரச்னைகளைப் பாருங்கள். உதவுங்கள். பரஸ்பரம் என்றில்லை. தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களும் இந்தியர்கள்தான்.
உடை வேறுபடலாம் தோழர்களே. எங்கள் மனம் என்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் என்ற நூலைத் தழுவியது.