நம்பிக்கை நாயகர்கள்- கார்த்திக் ஆர்யன், பா ரஞ்சித், தனுஷ், புவன் பாம்









கார்த்திக் ஆர்யன்





எப்போதுமே புதுசுதான்! 


கார்த்திக் ஆர்யன்

இந்தி நடிகர்


கார்த்திக் ஆர்யன், தனது 20 வயதில் முதல் படத்தில் நடித்தார். 2011இல் வெளியான பியார் கா பன்ச்னாமா என்ற படம் அது. அதனை பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். லவ் ரஞ்சன் இயக்கிய நவீனமான காதல் கதைப்படம் அது.  குவாலியரில் பிறந்த கார்த்திக் ஆர்யன் பிறகுதான் பிரபலமாகத் தொடங்கினார். இத்தனைக்கும் அவருக்கு சினிமா பின்புலம் ஏதும் கிடையாது. பதினெட்டு வயதில் மும்பைக்கு வந்தவர் கார்த்திக். 

எனக்கு எந்த இரண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே வாய்ப்புதான். அதில் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது என்பவர் சொல்லியபடியே இரண்டு பன்ச்னாமா பாகங்களில் நடித்தார். பிறகு சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்திலும் நடித்து நமது மனதை கவர்ந்தார். 

பிறகு நடித்த லூக்கா சூப்பி, பதி, பத்னி ஆர் வோ ஆகிய படங்கள் மெல்ல ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது கூட புதிய இயக்குநர்களோடு பணியாற்றவே மெனக்கெடுகிறார். வண்டி நன்றாக ஓடும்போது எதற்காக இந்த ரிஸ்க் என பலரும் கார்த்திக்கிடம் கேட்கிறார்கள்தான். ஆனால் அவர் அதைப்பற்றி கவலையே படவில்லை. தோல்விகளைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவே இல்லை. 

கார்த்திக் விளம்பர படத்தில் நடித்ததற்காக வாங்கிய முதல் சம்பளம் ரூ. 1500. அதனை இவரது பெற்றோர் பிரேம் போட்டு மாட்டி வைத்துள்ளனராம். 

2



பா ரஞ்சித் 





பெரும் மாற்றத்தை விதைத்தவர்

பா ரஞ்சித்

கடந்த ஆண்டுகளில் சமூகத்தில் திரைப்படங்கள் மூலமே நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியவர் பா ரஞ்சித். 2012ஆம் ஆண்டு இவரது தொடக்கம் அட்டக்கத்தி என்ற திரைப்படம் வழியாக நடைபெற்றது. அண்மையில் வெளியான சார்பட்டா திரைப்படம் அசத்தலான முத்திரையைப் பதித்துள்ளது. சென்னை மொழி, அதன் மனிதர்கள் என மறக்கமுடியாத பாத்திரங்களையும், குத்துச்சண்டை பற்றிய வரலாற்றையும் சொல்லிய படம் இது. 

திரைப்படம் என்ற வழியில் தனது சமூகம் சார்ந்த பார்வைகளை முன்வைக்கிறார் ரஞ்சித். கூடவே நீலம் கலாசார மையம், நீலம் தயாரிப்பு நிறுவனம், நீலம் பதிப்பகம் என பல்வேறு அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார். இவற்றின் மூலம் தலித் மக்களுக்கான கல்வியை வழங்க முயல்கிறார். மாரி செல்வராஜ், ஷியாம் சுந்தர், மனோஜ் லியோனல், ஜாசன், அதியன் ஆதிரை ஆகியோருக்கும் படம் இயக்கும் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். 

மார்கழியில் மக்களிசை எனும் கலாசார நிகழ்ச்சியையும் தொடங்கி நாட்டுப்புற பாடகர்கள், செயல்பாட்டாளர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். திரைப்படமாகவும் தனது மனைவி இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை நிறைவு செய்துள்ளார். அடுத்த படம் விக்ரமுடன் என பேசப்பட்டு வருகிறது. 




தனுஷ்


கண்களாலேயே நடிக்கும் கலைஞன்

தனுஷ்

இயக்குநர், பாடகர், நடிகர்

தமிழ் திரைப்படத்துறையில் தனுஷ் கடந்த பத்தாண்டுகளாகவே உயரத்தில்தான் இருக்கிறார்.  துள்ளுவதோ இளமை தொடங்கி மாறன் வரை வளர்ந்து வந்துகொண்டே இருக்கிறார். காதல் கொண்டேன் படம் தனுஷின் நடிப்பை உலகிற்கு சொன்னது. அதனை இயக்கியது அவரது சகோதரரான செல்வராகவன். 

தொடக்கத்தில் அவருக்கான சந்தை பெரிதாக உருவாகவில்லை. அப்போது விஜய், அஜித் என இருவருக்குத்தான் அதிக மவுசு. தொடக்கத்தில் தனது சகோதர ரின் படங்களில்தான் நம்பிக்கை தரும்படி நடித்தார். ஆனால் பின்னாளில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் படங்களில் நினைத்தே பார்க்க முடியாத தன்னம்பிக்கையுடன் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். 

 2010ஆம் ஆண்டு ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வாங்கினார் தனுஷ். கமல் ஹாசனுக்கு பிறகு இந்தி மொழியில் நடித்து புகழ்பெற்றவர்களின் தனுஷூக்கு முக்கியமான இடம் உள்ளது. தனது முதல் ஃபிலிம்பேர் விருதை ராஞ்சனா என்ற இந்திப்படத்திற்காக வாங்கினார். அட்ரங்கி ரே என்ற இந்திப் படத்திலும் நாயகனாக நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார். 



புவன் பாம்


புவன் பாம் 

யூடியூபர் , நடிகர், பாடகர்


இருபத்தேழு வயதுதான் ஆகிறது. ஆனால் யூடியூபைப் பயன்படுத்தி அந்த சேனலில் இவர் பதிவு செய்த வீடியோக்கள் அனைத்துமே மக்களுக்கானவை. பொழுதுபோக்கு விஷயத்தில் நடிகர் கோவிந்தாவின் விசிறியான புவன் பாமை அடித்துக்கொள்ளவே முடியாது. 

யூடியூபில் சேனல் தொடங்கும் முன்னர், டெல்லியில் உள்ள ரெஸ்டாரெண்டுகளில் வாரத்திற்கு ஆறு நாட்கள் பாடகராக வேலை செய்தார். தினசரி நான்கு மணி நேரங்கள் பாடுவதுதான் வேலை. இன்று யூடியூபில் இவரது வீடியோக்களை பார்க்க 24.2 மில்லியன் பார்வையாளர்கள் காத்திருக்கிறார்கள். டிண்டோரா எனும் வெப் சீரிஸ், பிளஸ் மைனஸ் என்ற குறும்படம் என இரண்டையும் எடுத்து சாதித்திருக்கிறார். 

பிரபலங்களை நேர்காணல் எடுப்பது, தினசரி வாழ்க்கையில் உள்ள விஷயங்களை எடுத்து நகைச்சுவையாக சொல்லுவது, பல்வேறு வேஷங்களில் நகைச்சுவை செய்வது என புவன் பாம் தொட்டது துலங்குகிறது. மக்களின் முகங்களில் சிரிப்பு மலர்கிறது. நேன் இந்தே என தில்லாக வீடியோக்களை போட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார் புவன். 




 

சுகானி சிங்

இந்தியா டுடே 




கருத்துகள்