மனிதர்களின் உலகைப் புரிந்துகொள்ளும் டிராகுலா! - டிரான்சில்வேனியா 4

 


டிரான்சில்வேனியா 4





டிரான்சில்வேனியா 4

சோனி அனிமேஷன்


டிரேக் தனது ஹோட்டலை தனது மகள் மாவிஸ், மருமகன் ஜானியிடம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் மருமகன் மனிதன் என்பதால், அவனை டிரேக்கிற்கு பிடிப்பதில்லை. மேலும், ஜானி உற்சாகப்பட்டு செய்யும் பல்வேறு அட்டகாசங்களால் ஹோட்டலை அவனிடம் கொடுக்க மறுத்து டிராகுலா சட்டம் என ஒன்றை சொல்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை. 







படம் தொடங்கும் டைட்டில் கார்டு தொடங்கி அனிமேஷன் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. இந்த கொண்டாட்டமான மனநிலை படத்தின் இறுதி வரை தொடர்கிறது. 

டிரேக் தனது ஹோட்டலில் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு வரும் ஜானி, விழாவை படு உற்சாகமாக மாற்றுகிறார். ஆனால் அது மாமனார் டிரேக்கிற்கு பிடிக்கவில்லை. ஜானி உற்சாக மிகுதியில் செய்யும் விஷயங்களை மாற்றி இயல்பாக நடக்க வைக்கிறார். தனது மனைவியிடம் ஹோட்டலை அவனிடம் ஒப்படைக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் நிலைமை மாற தான் சொன்னதை மாற்றிக்கொள்கிறார். இதற்கு பதிலாக ஜானி, மான்ஸ்டர் கிடையாது என்பதை சொல்கிறார். 




டிரான்சில்வேனியா 4 


இதனால், மனம் உடையும் ஜானி தன்னை மான்ஸ்டராக மாற்றிக்கொள்ள வான்ஹெல்சிங் என்ற பாதாள ஆராய்ச்சியாளரிடம் செல்கிறான். அவர் கொடுக்கும் மருந்து ஜானியை மாற்றுகிறது. அதன் விளைவாக டிரேக்கின் வாழ்க்கையும் ஹோட்டலின் எதிர்காலத்தையும் மாற்றுகிறது. 

படம் நெடுக மனிதனாக இருப்பது, மான்ஸ்டராக இருப்பது என்ன பலம், பலவீனம் என்பதை விவாதிக்கிறார்கள். கிரிஸ்டல் ஒன்றை எடுக்கச்செல்லும் பயணம் முழுக்க இந்த உரையாடல்கள் இருவரின் உலகையும் அறிந்துகொள்ள உதவுகிறது. 

உலகில் எதிர்மறையான விஷயங்கள் அதிகமாக இருந்தாலும் பாசிட்டிவ்வான விஷயங்களைப் பார்க்கலாம் என உணவுப் பொருள் வைத்தே புரியவைத்திருக்கிறார் ஜானி. 


மனிதன் பாதி மிருகம் மீதி

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்