முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

 

















ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா? 

பிரான்ஸ் 

இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது. 

அமெரிக்கா

1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர். 

பெல்ஜியம்

இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன. 

ஸ்விட்சர்லாந்து

2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்தனர். இப்படி வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம். 

ஆஸ்திரியா 

2017ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாடு, அரசு அமைப்புகளின் அலுவலகங்கள், பல்கலைக்கழகங்களில் முகத்தை மூடும் உடைகளை அணியக் கூடாது என தடை விதித்தது. 

ஆஸ்திரேலியா

இங்கு பொதுஇடங்களில் முஸ்லீம்கள் முகத்தை மூடக்கூடாது என்று ஏராளமான விவாதங்கள் நடந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அரசு இதனை முக்கியமாக கருதவில்லை. கோவிட் காலத்தில் மக்களுக்கு உதவிய மருத்துவர்கள் பற்றிய ஸ்டாம்பை வெளியிட்டது. இதில் இடம்பெற்ற மருத்துவர் ஹிஜாப்பை அணிந்திருந்தார். பதில் கிடைத்துவிட்டது அல்லவா?

நியூசிலாந்து

2020ஆம் ஆண்டு நியூசிலாந்து காவல்துறை, தனது அமைப்பில் முஸ்லீம் பெண்களை சேர்த்துக்கொள்ள நினைத்தது. இதனால், அதன் சீருடையில் ஹிஜாப்பைக் கூட இணைத்துள்ளது. இதன்மூலம் நிறைய பெண்களை தனது அமைப்பில் சேர்க்க காவல்துறை விரும்புவது தெரிய வந்துள்ளது. 

இந்தியா டுடே 

பின்டிரெஸ்ட்









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்