புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் !

 

 

 



கல்வி அறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை தரும் புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம்

பாரதம், பாரதீய என்று கூறுவது காவி இயக்கம், கட்சிகளை நினைவுபடுத்துகிறது. எனவே கல்வியறிவுத்திட்டம், புதிய இந்தியா என்ற பெயரில் கட்டுரையில் பயன்படுத்தப்புகிறது.

தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு வசதி இல்லாமல் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டவர்கள், பலர் இன்றும் பேருந்து பார்த்து ஏறவும், எண்களைப் பார்த்து படிக்கவும் சிரமப்படுகின்றனர். சிறுவயதில் அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, அதைத் தடுக்க உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் முயற்சி செய்து வெற்றி கண்டிருப்பார்கள். அதன் விளைவாக, அவர்களின் கல்வியறிவு அஸ்தமனமாகி இருக்கும். பிற்காலத்தில், கையெழுத்து கூட போட முடியாமல், கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருவார்கள்.

இதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு இணைந்து நிதியுதவி அளித்து கல்வியறிவுத் திட்டம் ஒன்றை நடத்துகிறது. அந்த வகையில் கற்றல் மையங்கள் முப்பதாயிரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ளன. இதன் வழியாக சேலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்திலுள்ள நாற்பது வயதுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். இவர்களில் பலரும் தாய்மொழியான தமிழைக் கற்று கையெழுத்தை போட்டு பழகி மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வங்கி படிவங்களை நிரப்புவது, போன்களை பயன்படுத்துவது என நடப்புகால பயன்பாடுகளையும் இணைத்து சொல்லி் தருவது முக்கியமானது.

2027ஆம் ஆண்டிற்குள் நூறு சதவீத கல்வியறிவு என்ற அடிப்படை இலக்கை குறி வைத்து கல்வியறிவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மொத்தம் எண்பது நாட்கள், இருநூறு மணிநேரம் என திட்டமிடப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் இணைந்து படித்து தேறுபவர்களுக்கு இறுதியாக தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. படிக்கும் தொழிலாளர்களுக்கு நூல்கள், எழுத ஏடுகள் வழங்கப்படுகின்றன.

கல்வியறிவு, சுகாதாரம், அரசு திட்டங்கள், டிஜிட்டல் அறிவு, அடிப்படை தினசரி திறன்கள், நிதி நிர்வாகம் ஆகியவை படிப்பின் வழியாக கற்றுத் தரப்படுகின்றன. புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டத்தில் சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களே திட்டத்தில் அதிக பயனாளிகளைக் கொண்டுள்ளது. இதில் எண்பது சதவீத பயனர்கள் பெண்களாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

learning to read write and between the lines rediscover their selfworth
sukshma.r@toi.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்