மெக்டொனால்டை உலகம் முழுக்க கொண்டு சென்ற ரே கிராக்! - சூப்பர் பிஸினஸ்மேன்
சூப்பர் பிஸினஸ்மேன்
ரே கிராக்
இன்று உலகம் முழுக்க துரித உணவுகளுக்கு அடையாளமாக இருப்பது மெக்டொனால்ட் கடைகள்தான். சாண்ட்விட்ச், பர்கர், பிரெஞ்ச் பிரைஸ் என விதவிதமாக விற்று வரும் இந்த கடைகளை உருவாக்கியவர் ரே கிராக். இவர் அமெரிக்காவில் 1902ஆம் ஆண்டு பிறந்தவர். தனது கடைகளுக்கான சிந்தனையை இவர் பெற்றபோது வயது 50 ஆகியிருந்தது. பலரும் வேலை செய்து களைத்து ஓய்வெடுக்கலாமா என்று யோசிக்கும் வயது. அப்போதுதான் மெக்டொனால்ட் உணவக ஐடியாவை பிடித்திருக்கிறார் ரே கிராக்.
1917ஆம் ஆண்டு தனது வயதை மறைத்து உலகப்போரில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்தார். பிறகு, காகித பொருட்களில் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்தார். எர்ல் பிரின்ஸ் என்பவர், மில்க்ஷேக்குகளை ஒன்றாக கலக்கும் மெஷினை உருவாக்கினார். இதனை வணிகத்திற்கான வாய்ப்பாக ரே கிராக் பார்த்தார். நாடெங்கும் சென்று பல்வேறு உணவகங்கள், பார்மசிகளில் மெஷின்களை விற்றார். ஆனாலும் கூடன 1950இல் இந்த மெஷின்களின் விற்பனை சரிந்துபோனது. ரே கிராக்கினுடையது, ஐந்து மில்க்ஷேக்குகளை ஒரே நேரத்தில் செய்வது என்றால் அதற்குப் பிறகு உருவான மெஷின்கள் ஒரே நேரத்தில் நாற்பது மில்க்ஷேக்குகளை தயாரிக்கும் திறன் இருந்தது. 1930ஆம் ஆண்டு, ரிச்சர்ட், மாரிஸ் மெடடொனால்ட் சகோதரர்கள் நியூ இங்கிலாந்திலிருந்து கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தனர். இவர்களுக்கு முக்கியமான வியாபாரமாக திரைப்படத்துறையை இருந்தது. சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் உணவகத்தை தொடங்கினர். இவர்களது சிறப்பு அம்சம், உணவை அறுபது நொடியில் வழங்குவதுதான். இவர்கள் தொடங்கிய உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான இடம் கிடையாது. ஹென்றி போர்டு எப்படி தனது நிறுவனத்தில் வேகமாக கார்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பினாரோ அந்த வகையில் மெனுகார்டு ஐட்டங்கள் ரெடியாகி வந்தன.
மெனுவில் மொத்தம் ஒன்பதே ஐட்டங்கள்தான். ஆனால் அத்தனையும் வேகமாக தயாராகும். உணவகமும் தார் பாய் ஹோட்டல் போல இல்லாமல் சாப்பிடுவதற்கான சூழலைக் கொண்டிருந்தது. பிளாஸ்டிக் பிளேட்டுகளின் மீது காகிதங்கள் விரிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. இருக்கைகள் கிடையாது. நின்றுகொண்டே சாப்பிடவேண்டியதுதான். விலையும் மிக குறைவு. இவர்களின் உணவக மாடல் கிராக்கிற்கு பிடித்திருந்தது. ஆனால் மெக்டொனால்ட் சகோக்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம், முன்னமே பிரான்சைஸ் கொடுத்து பட்ட மோசமான அனுபவங்கள்தான். இருப்பதே போதுதே இதற்குமேல் என்ன என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். கிராக் மட்டுமே இது நல்ல வணிக வாய்ப்பு என்பதை முன்னமே அடையாளம் கண்டு கொண்டார். இதன் விளைவாக மெக் சகோக்களிடம் பேரம் பேசி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இதன்படி மெக்டொனால்டு உணவகத்தை தொடங்க நினைப்பவர்கள் கிராக்கிற்கு 950 டாலர்களைத் தரவேண்டும். பிறகு கடையை நடத்தி வரலாம். அதில் கிடைக்கும் லாபத்தில் 1.9 சதவீதம் கிராக்கிற்கும், 0.5 சதவீதம் மெக் சகோக்களுக்கும் சென்று சேரும். இப்படி சிகாகோவில் முதல் மெக்டொனால்டு கடையை கிராக் திறந்தார்.
பலரும் நினைப்பார்கள் இது கிராக்கின் ஐடியா கிடையாது. இதில் அவர் என்ன செய்தார் என்று.. மெக்டொனால்டு சகோக்களுக்கு மாடல் தெரிந்தது. அது வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் உலகமயமாக்கல் சூழலில் அதனை எப்படி பெரிய நிறுவனமாக மாற்றி வெல்வது என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருந்து. கிராக் உள்ளே வந்தார். தனது உழைப்பால் மெக்டொனால்டு உணவகங்களே இல்லாத இடமில்லை என்ற நிலையை உருவாக்கினார். ஊக்கம் என்பது ஒரு சதவீதம்தான் மீதி 99 சதவீதம் உழைப்பு தேவை என்ற எடிசனின் மேற்கோளை இங்கு கூற நினைக்கிறேன்.
மெக்டொனால்டின் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம், அனைத்து விஷயங்களும் ஒன்றுபோலேவேதான் இருக்கும். அவர்களின் மெனு, அதனை பரிமாறும் முறை, உணவின் அளவு, விலை என்பதெல்லாம் தரப்படுத்தப்பட்டவை. இதன் காரணமாக மெக்டொனால்ட் உணவக அனுபவம் என்பது அனைத்து நாடுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும். இந்தியாவில் கலாசாரம் சார்ந்து சில மாறுபாடுகள் இருக்கலாம். அமெரிக்காவில் மாட்டுக்கறியை பர்கரில் பயன்படுத்துகிறார்கள் என்றால் இந்தியாவில் அதனை அரசியல் பிரச்னைக்காக பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.
உணவுப்பண்டங்களின் விலையை குறைவாக வைத்திருக்கவேண்டும் என்பதை முக்கியமான கொள்கையான கிராக் பின்பற்றினார். இதனால் மெக்டொனால்டில் பெரும்பாலான ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள். கல்லூரியில் படிப்பவர்கள், பகுதிநேர ஊழியர்களே அதிகம். இவர்களுக்கான சம்பளம் குறைவு என்பதால் செயல்பாட்டு செலவு கிளைகளில் பெருமளவு குறைந்தது. மெக்டொனால்டு நிறுவனத்திற்கு நிலங்களை வாங்கிக்கொடுத்து அதற்கென லாபத்தில் பங்கு எடுத்துக்கொள்ளும் திட்டத்தை கிராக் உருவாக்கினார். இதற்கான மூலயோசனையை வழக்குரைஞர் ஹாரி ஜே சொனேபார்ன்.
மெக்டொனால்டு கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் சாப்பிடும் பல்வேறு ஐட்டங்கள் செப்கள் கண்டுபிடித்தது அல்ல. அனைத்துமே கிளைகளை தொடங்க வந்தவர்கள் சொன்ன ஐடியாக்கள், யோசனைகள், கலந்துரையாடல் என கிடைத்தவை அனைத்தையும் காசாக்கினார் கிராக்.
1961ஆம் ஆண்டில் கிராக்கிற்கு அடுத்தடுத்த சோதனைகள் ஏற்பட்டன. 39 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்து பெற்று வெளியேறினார். தான் வாங்கிய கடனுக்காக நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை இழக்க நேர்ந்தது. இதனால் நிறுவனத்திற்கு ஆதாரமாக இருந்த அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை வேலையை விட்டு விலக்க நேர்ந்தது.
மெக்டொனால்டு சகோக்களுக்கு 2.7 மில்லியன் டாலர்களை கொடுத்து அவர்களை தனியாக பிரித்துவிடும் பஞ்சாயத்து தொடங்கியது. அவர்கள் பிக் எம் என்ற உணவகத்தை தொடங்கினர். கிராக், தனது மெக்டொனால்டு நிறுவனத்தை மேலும் பல்வேறு நகரங்களில் தொடங்கினார். பர்கரில் நடுவிலுள்ள பொருட்களை பலரும் மலிவான பொருட்களை வைத்து தயாரித்து வழங்கியபோது, கிராக் தனது தரத்தில் எப்போது குறைவைத்ததே கிடையாது. விலை குறைவு, சுவையும் தரமும் நிறையவே என்பதுதான் அவரது செயலாக இருந்தது. தனக்கென தனி நிறுவனத்தை பெற்றுவிட்ட கிராக், நிறுவனத்தைப் பிரபலப்படுத்த ஏராளமான விளம்பரங்களை தயாரித்தார். இது செலவு அதிகம் என்றாலும் கூட மெக்டொனால்டு என்றால் என்ன என்பதை மக்கள் தெளிவாக அறிந்துகொண்டுவிட்டார்கள். பிறகு என்ன விரிவாக்கம்தானே? ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளிலும் கிளைகளைத் தொடங்கினார்கள். கிராக் நாடறிந்த பிரபலமாகத் தொடங்கினார். கூடுதலாக, சான்பிராசிஸ்கோ பேடர்ஸ் என்ற பேஸ்பால் டீமை வாங்கி நடத்தினார். அமெரிக்க அதிபர்களைத் சந்தித்தார். அப்போதுதான் மெக்டொனால்டு விற்கும் பொருட்களில் ஊட்டச்சத்து கிடையாது என்ற புகார் கிளம்பியது. அப்போது அமெரிக்க பொருளாதாரம் உற்பத்தி என்ற நிலையிலிருந்து மாறி சேவைத்துறைக்கு வந்திருந்தது.
புகார்கள், குற்றச்சாட்டுகள் என எதையும் கிராக் கண்டுகொள்ளாமல் வேலை பார்த்தார். 1968இல் தனது இயக்குநர் பதவியை விட்டு விலகினாலும் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைகொண்டிருந்தார். எதுவரை 1984ஆம் ஆண்டு எண்பத்தியொரு வயதில் அவர் இறக்கும் வரை. அச்சூழலில் அவரது நிறுவனம் 50 பில்லியன் ஹேம்பர்க்கரை விற்றுக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் பெருநிறுவனங்களில் அதுவும் ஒன்றாக மாறியிருந்தது. அப்போதைய அதன் மதிப்பு 4 பில்லியன் ஆகும். மெக்டொனால்டு என்ற நிறுவனம் வெறும் உணவுப்பொருட்களை விற்கும் நிறுவனம் மட்டுமல்ல அமெரிக்கர்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றியதோடு, அவர்களின் வாழ்க்கையை முறையிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில்- கா.சி.வின்சென்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக