தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

 







கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல்

ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.   கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதனை கல்வி வல்லுநர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பள்ளி கல்வி, உயர்கல்வி என இரண்டிலும் ஜிஇஆர் முறையில் தமிழ்நாடு சிறப்பான புள்ளிகளைப் பெற்றுள்ளது என்கின்றனர். 2019-20ஆம் ஆண்டுக்கான  ஆல் இந்தியா சர்வே ஆப் ஹையர் எஜூகேஷன்  அறிக்கை ஜிஇஆர்  முறைப்படி தமிழ்நாடு 51 சதவீதம் சிறப்பாகவே இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. பிற மாநிலங்களான  மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகியவற்றை விட சிறப்பாகவே உள்ளது. ஜிஇஆர் முறையில் 21 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

யூடிஐஎஸ்இ  அறிக்கை 2019-20 படி, 1 முதல் 5 வரையிலான சேர்க்கை  குறைவு  98.9 ஆக உள்ளது. இது பிற 20 மாநிலங்களை விட மோசமாக உள்ளது. ஆனால் உயர்கல்வியில்  நாட்டிலேயே நான்காவது மாநிலமாக 73 சதவீதம் பெற்றுள்ளது.  இந்த ஆய்வில் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக தமிழகம், ஜிஇஆர்  ஆய்வில் முதல் நான்கு இடத்தில் வந்துகொண்டிருந்த மாநிலம் என்கிறார் காயிதே மில்லத் கல்வி நிறுவனத்தின் பொது செயலாளர் மியாகான். 

2019-20 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேரும் தோராய மாணவர்களின் எண்ணிக்கை 800ஆக உள்ளது. இந்தவகையில் தமிழ்நாடு பீகார், மேற்கு வங்கம், டெல்லி ஆகியவற்றுக்கு பின்னால் போய்விட்டது. உயர் கல்வியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. பெண்கள் உயர்கல்வியில் சேருவது என்பதில் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு பின்னர்தான் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. 

கல்வியில் கோவை பின்தங்கியது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. பத்தாவது, பனிரெண்டாவது வகுப்பு தேர்வு முடிவுகளில் மாவட்ட அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் வரும் மாவட்டம் அது. வால்பாறை, வெள்ளியங்காடு பகுதிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. இந்த அளவு என்பது குறைவுதான். மாணவர்களின் தேர்ச்சி அளவு அதிகமாக உள்ளதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். மலைப்பகுதியை தவிர்த்து பிறபகுதிகளில் தேர்ச்சி அளவு அதிகம். 

என்றார் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவரான அருளானந்தம். 

மத்திய அரசு சொல்வதை முக்கியமாக எடுத்துக்கொண்டாலும் சேர்க்கை, தேர்ச்சி தகுதி என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மாநிலத்தின் கலாசாரம் பொறுத்து இதில் மாநிலம் தோறும் வேறுபாடுகள் உண்டு. அரசு இதனைக் கண்டுபிடிக்க, வீடுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களின் சேர்க்கையை உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக பட்டியலினத்தவர்களை, ஆதி திராவிடர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை கவனப்படுத்த வேண்டும். கூடுதலாக அனைவருக்குமான கல்விச்சட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார். +

1924ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில்  கட்டாய தொடக்க கல்வியை அமல்படுத்தினர். இக்கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. 1950இல் பத்து கி.மீ. க்குள்  ஒரு பள்ளி இருக்கவேண்டுமென சட்டம் இயற்றப்பட்டது.  ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம்  வழங்கப்பட்டது. பின்தங்கிய பல்வேறு மாநிலங்களில் கல்வி பற்றிய தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை. இந்த நிலையில் எப்படி ஒன்றிய அரசின் தகவல்களை நம்புவது? என்கிறார் கஜேந்திர பாபு. 

சிறுபான்மை, பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. அங்குள்ள ஆசிரியர்களை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. 




தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

ஓம்ஜஸ்வின் எம்டி

image pixabay

கருத்துகள்