நான் திமுக என்ற கட்சிக்கான முதல்வர் அல்ல; தமிழ்நாட்டிற்கான முதல்வர்! - மு.க. ஸ்டாலின்

 







மு.க. ஸ்டாலின் 

தமிழக முதல்வர்


முத்துவேல் கருணாநிதியாகிய நான் என்று உறுதிமொழி ஏற்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

எனது உறுதிமொழி ஏற்பு என்பது 150 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. திருக்குவளை தமிழ்நாட்டிற்கு மகத்தான தலைவரை தந்துள்ளது.  முத்துவேலர் கவிஞர், பாடல்களை எழுதுபவராக இருந்தார். அவர்தான் கலைஞரின் தந்தை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதித்தவர். நான் வரலாற்றின் தொடர்ச்சியாகவே உணர்கிறேன். நான் மட்டுமல்ல. என்னோடு சேர்ந்து உறுதிமொழி எடுத்த திமுக தொண்டர்கள் அனைவருமே இப்படிப்பட்ட உணர்வை மனதில் கொண்டிருப்பார்கள். லட்சியம் உயர்வாக இருந்தால் பெரிய உயரங்களைத் தொட முடியும் என கலைஞர் கூறுவார். அந்த வாக்கியத்தை நினைத்துப் பார்க்கிறேன். 


அதிமுக பலவீனமாவது திமுகவிற்கு அல்லது பாஜகவிற்கு ஆதாயமாகுமா?

திமுக என்பது இயக்கம். அது தமிழ்நாட்டில் அதற்கென தனி பலத்தைக் கொண்டுள்ளது. இங்கு மதவாத சக்திகள் கால்பதிக்க வாய்ப்பே கிடையாது. 

திமுக ஆதரவாளர்கள் மட்டுமன்றி பிறருக்கும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் பயன் அளிக்குமா?

நான் திமுகவிற்கான முதலமைச்சர் அல்ல. தமிழ்நாட்டிற்கான முதல் அமைச்சர். மக்கள் என்னை நம்பியதால்தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன். அவர்களது குறைகளை அடையாளம் கண்டு தேவையான துறைகளுக்கு பரிந்துரை செய்கிறேன். அவ்வளவுதான். 

தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை எப்படி பலப்படுத்தப் போகிறீர்கள்?

நாங்கள் அங்கு நாடாளுமன்ற தேர்தலில் வென்றிருந்தோம். சட்டமன்றத் தேர்தலில் தோற்றுள்ளோம். இதற்கு காரணம், ஆதாயம் தேடும் கும்பலின் விஷம பிரசாரம்தான். நாங்கள் இதனை அடையாளம் கண்டு எங்களை பலப்படுத்திக்கொள்வோம். திமுகவிற்கான ஆதரவை தாங்க முடியாமல் அதிமுகவினர் செய்த மோசமான செயல்தான் இது. 

உங்கள் அப்பாவிற்கும் உங்களுக்குமான பணிவேறுபாடுகள் என்ன?

அவர் கலைஞர், நான் ஸ்டாலின் என்பதுதான். இன்றிருப்பதும் கலைஞரின் அரசுதான். அவரின் அனுபவம், தொலைநோக்கு ஆகியவற்றுடன் நாங்கள் இயங்கி வருகிறோம். அவரின் வழிகாட்டல் அரசுக்கு உண்டு. 

உங்கள் அப்பா, உங்கள் வெற்றியை பார்க்க முடியவில்லை என வருந்துகிறீர்களா?


இல்லை. ஆனால் தமிழகமும், அதன் மக்களும் அவர் இல்லாமல் போனதற்காக வருந்தினார்கள். ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பதை பார்க்க கலைஞர் இங்கு இல்லை. ஆனால் அவர் எங்களுக்குள், நமக்குள் இருந்து வழிகாட்டி வருகிறார் என்று நினைக்கிறேன். 


கோவிட் மேலாண்மையில் ஒன்றிய அரசு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதா? தடுப்பூசிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததா?

தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நாங்கள் அழுத்தம் கொடுத்து ஒன்றிய அரசுக்கு கூறியுள்ளோம். மாநிலத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தடுப்பூசி அளவு குறைவுதான். நாங்கள் இப்போதும் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளுக்காக போராடித்தான் வருகிறோம். 

எதிர்க்கட்சிகள் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

அதிமுகவினர் தங்களது ஊழல் பிரச்னைகளை மறைக்க இப்படி குற்றம்சாட்டுகிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. எங்கள் அரசு செய்த சாதனைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கூடவே பாராட்டுகிறார்கள். அதிமுகவினரை சட்டம் பார்த்துக்கொள்ளும். 


பொருளாதார கௌன்சில் ஒன்றை அமைத்திருக்கிறீர்கள். அது எதற்காக?

முதல்வரின் பொருளாதார கௌன்சிலை சிறந்த வல்லுநர்கள் கொண்டு உருவாக்கியது அனைத்து துறைகளும் பொருளாதார வளர்ச்சி பெறத்தான். அதுதான், அனைத்து துறைகளிலும் சமூகநீதி நிலைபெறச்செய்யும். முந்தைய அதிமுக ஆட்சியைப் போல பணத்தை வீண் செய்வதாக இந்த முயற்சி இருக்காது. தமிழ்நாட்டை தன்னிறைவு கொண்டதாக பொருளாதார வளம் கொண்டதாக பொருளாதார கௌன்சில் முயற்சி மாற்றும் என நம்புகிறேன். 


ஜெயா  மேனன்

டைம்ஸ் ஆப் இந்தியா








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்