இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?
இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?
தூக்கத்திற்கு நேரம் முக்கியம்
சூரியன் காலையில் எழுந்து மாலை மறைகிறது அல்லவா, அதே முறையில் தூக்கம் அமையவேண்டும். அதுபோல உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.
காலையில் எழுந்து சூரிய ஒளி மேலே படும்படி உலாவ வேண்டும். உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடக்கலாம். நாய் இருக்கிறதா, அதை அழைத்துக்கொண்டு வெளியே உலாவச் செல்லலாம்.
ஒருநாளுக்கு இருபது நிமிடங்களேனும் பசுமையான நிலப்பரப்பை பார்க்கவேண்டும். மரத்தில் அடியில் உட்கார்ந்து உணவை உண்ண முயலலாம்.
முட்கள் இல்லாத புற்கள் உள்ள இடத்தில் செருப்பை அணியாமல் வெற்று கால்களோடு சிறிது நடக்கலாம். அசுத்தமான இடங்களில் காலணி இன்றி நடப்பது நோய்களைக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.
வெளியே மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் சமயங்களில் போன், வாட்ச் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் மேகத்தை, பறவைகளைப் பார்க்க முடியும். வீசும் குளிர்ந்த தென்றலின் இனிமையை உடலும் மனதும் உணரும்.
தோட்டத்தை பராமரிக்க முயலலாம். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், அதில் பூக்கள், காய்கறிகளை விதைத்து பராமரிக்கலாம். உளவியல் ரீதியாக தோட்டவேலை உங்களை மேம்படுத்தும்.


கருத்துகள்
கருத்துரையிடுக