ஷி ச்சின்பிங் உரைகள், கட்டுரைகள் மூலமாக நடக்கும் பிரசாரம்!


 ஷி ச்சின் பிங்கின் உரைகள் பாடமாக....

ஷி ச்சின் பிங் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், உலக நாடுகளிலுள்ள 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் ஷி என்ன நினைக்கிறாரோ அதிலிருந்து துளியும் விலகாமல் கட்சியினர், உறுப்பினர்கள், வணிகர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறர் அப்படியே வழிமொழிய வேண்டும். இப்படித்தான் சீன கனவுக்கான அடிக்கல் உருவாக்கப்பட்டு வருகிறது.

வலிமையான தேசியவாதம், நாடுபற்றிய பெருமை, வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிராத தன்னிறைவு கொண்ட நாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி்ல ஷி, முன்னாள் அதிபரான மாவோவைப் பின்பற்றுகிறார். அடுத்து கன்பூசியசின் பல்வேறு கருத்துகளை விரும்புகிறார். ஐந்து வகை உறவுகளை சமூகம் பின்பற்றவேண்டுமென கன்பூசியஸ் கூறியுள்ளார். அரசர் - மக்கள், தந்தை - மகன், அண்ணன்-தம்பி, கணவர்-மனைவி, இரு நண்பர்களின் உறவு ஆகியவைதான் அவை. 

அடிப்படை தலைவர், மக்கள் தலைவர் என பல பட்டங்கள் அதிபர் ஷிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சியின் பொதுசெயலாளார்,தேசிய ராணுவ கமிஷனின் தலைவர், மக்கள் சீன குடியரசின் தலைவர் என ஏற்கெனவே அவருக்கு பல பதவிகள் உண்டு. இருந்தாலும் அவருக்கு புதிய பட்டங்களும் பிடித்திருக்கிறதுதான். கட்சி மட்டுமல்ல சீனாவில் வாழும் அனைவருமே அவரை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார். 

மாவோ, லெனின், கன்பூசியஸ் ஆகியோரது கருத்துகளை பயன்படுத்தி கட்சியில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வதோடு, நாட்டின் பாதுகாப்பையும் அதிகரிக்க முயல்கிறார். மக்கள் சீன குடியரசின் நிறுவனர்களின் ஒருவரான ஷி ஷாங்குசுன், ஷி ச்சின்பிங்கின் தந்தை. எளிதாக கிடைத்திருக்க வேண்டிய ஆட்சியதிகாரம், டெங்கின் செயல்பாடுகளால் தகர்ந்துபோனது. சோவியத் யூனியன் தோல்விக்கு, அக்கட்சி துரோகியான மிக்கைல் கோர்ப்பசேவை எதிர்த்து போராடாததே காரணம் என ஷி நம்புகிறார். எனவே, அவரைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது கட்சியில் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதிலிருந்து வேறுபட்டதல்ல. இரண்டுமே ஒன்றுதான். 

2012ஆம் ஆண்டு பெய்ஜிங்கிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்ற பெயரில் தனது கருத்துகளை உலகிற்கு வெளியிட்டார். அப்போது பதினெட்டாவது பொதுவுடைமைக் கட்சி மாநாடு நடைபெற்று முடிந்து இருவாரங்கள் ஆகியிருந்தது. அதில், ஷி கட்சி பொதுச்செயலாளராக தேர்வாகியிருந்தார். 

2021ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கட்சி தொடங்கிய நூற்றாண்டு. அதற்குள் சீனா வலிமையான செல்வச் செழிப்பான நாடாக வளர்ந்திருக்க வேண்டும். அதற்கேற்ப நாட்டை நாம் உருவாக்க வேண்டும். 

2049ஆம் ஆண்டில் நவீன சோசலிச நாடாக சீனா வலிமை ஜனநாயகம், கலாசாரம் ஒத்திசைவு கொண்டதாக உருவாகியிருக்க வேண்டும்  என இலக்குகளை உருவாக்கி இருந்தார் ஷி ச்சின் பிங். 


மூலம் 
தி பொலிட்டிகல் தாட் ஆஃப் ஷி ச்சின்பிங்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!