இந்தியாவில் தொடங்கிய இம்பீரியல் வங்கி எஸ்பிஐயாக மாறிய வரலாறு! - புதிய நூல்கள் அறிமுகம்

 

 

 

 

The Story Behind State Bank Of India Logo - Marketing Mind

 

 

நூல் அறிமுகம்


கார்டன் ஆப் ஹெவன்


மதுலிகா லிடில்

ஸ்பீக்கிங் டைகர்


599


1192-1398 ஆகிய காலங்களில் டெல்லியில் நடைபெற்ற முகலாயர்களின் ஊடுருவல் பற்றி பேசும் நூல் இது. முகமது, தைமூர் என இரு ஆட்சியாளர்களின் படையெடுப்பும் அதன் விளைவுகளும் நூலில் விளக்கப்படுகிறது.



இட் மஸ்ட் ஹேப் பீன் லவ் பட்…


ஆஷா சி குமார்


புக் லாக்கர்.காம்


ரூ. 1549


பள்ளியில் பணிபுரியும் இரு ஆசிரியர்களான அபெக்‌ஷா, மாயா இருவரின் காதல்தான் கதை. இதில் பெண்களின் சுதந்திரம், ஆசைகள் பற்றி தீவிரமான விவரிப்புகள் நூலை சுவாரசியம் ஆக்குகின்றன.


பெஸ்ட் இன்டென்ஷன்


சிம்ரன் திர்


ஹார்பர் கோலின்ஸ்


399


காயத்ரி மெஹ்ரா, வரலாற்று எழுத்தாளர். இவர் எழுதும் கட்டுரை ஒன்று வலதுசாரி குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதனை அவர் எப்படி சமாளித்தார், இதற்காக அவர் தனக்குப் பிடிக்காத ஒரு நபரைக் கூட சந்தித்து உதவி கோரும்படி சூழ்நிலை மாறுகிறது. இதன் விளைவுகள்தான் கதை.


தி எஸ்பிஐ ஸ்டோரி


டூ சென்சுரி ஆப் பேங்கிங்

விக்ராந்த் பான்டே

வெஸ்ட்லேண்ட் பிசினஸ்

ரூ.699


இம்பீரியல் வங்கியாக இருந்துதான் அரசால் தேசியமயமாக்கப்பட்டு எஸ்பிஐ என ரிசர்வ் வங்கிக்கு அடுத்த்படியாக முக்கியமான வங்கியானது. இதன் வரலாறு தனியொரு வங்கியின் கதை மட்டுமல்ல. தேசத்தில் வளர்ந்து வந்த வங்கிகளின் வரலாறும் கூடத்தான்.



எ ஃபி்ஷ் இன் அலைன் ஸ்ட்ரீம்

ஹெர்ஜிந்தர்

ஹாசெட் இந்தியா

ரூ.350


ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தோட்டங்கள், கட்டிடங்கள், மணிக்கூண்டுகள் என பலவற்றையும் விட்டுவிட்டு சென்றனர். பலரும் அறியாத ஒன்று, அவர்கள் புதிய வகை மீன் இனங்களையும் ஆறுகளில் அறிமுகப்படுத்தினர் என்பதுதான். அதைத்தான் நூல் விவரிக்கிறது.


தி டார்க் அவர் இந்தியா அண்டர் தி லாக்டௌன்


ரூபா


395


பொதுமுடக்கம் ஏற்படுத்திய பயம், விளைவுகள் பற்றி பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட நூல்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்