சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பால் தட்டுப்பாடு! - இந்தியா 75

 

பால் பொருட்களில் மிட்டாய் செய்யத் தடை!

இந்தியா 75 மற்றும் அமுல் 75


1970ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தது. காவல்துறை அதிகாரி அங்குள்ள எந்த வீட்டிலும் சென்று சோதனையிட அந்த சட்டம் அதிகாரம் வழங்கியது. அப்படி என்ன அங்கு ஊழல் நடந்துவிட்டது? திடீரென இப்படியொரு சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என அனைவருக்குமே தோன்றும். அந்த காலகட்டத்தில் பாலின் தேவை அதிகமாக இருந்தது. அதனை பிற மாநிலங்களுக்கு விற்க அல்லது மிட்டாய்களை, இனிப்புகளை செய்ய தடுப்பதே அரசின் நோக்கம். 

சட்டம் அதற்கெனவே உருவாக்கப்பட்டது. கோடைக்காலத்தில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட பனீர் அல்லது வேறு வகை இனிப்பு பலகாரங்கள் செய்வதைக் கூட அரசு தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு மேற்கு வங்க சன்னா சட்டம் என்பதன் பேரில் பாலில் பலகாரங்களை தயாரிப்பதை தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு, ஜூன் மாதம் பால் பொருட்களில் ஏதேனும் இனிப்புகளை தயாரிக்கிறார்களா என்பதைக் கண்காணித்து தடுத்த தொடங்கியது. 

1969ஆம் ஆண்டு மத்திய அரசு டெல்லி, மீரட், புலந்த்சார் ஆகிய பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை பரிமாற தடை விதித்தது. இருபத்தைந்திற்கும் அதிகமான விருந்தினர்களைக் கொண்ட விழாக்களுக்கு இச்சட்டம் கடுமையாக்கப்பட்டது. 

இந்தியா இன்று பால் உற்பத்தியில் பெரிய நாடு என்ற பெருமையை பெற்றுவிட்டது. ஆனால் சுதந்திரம் பெற்றபோது நிலைமை தலைகீழாக இருந்தது. அப்போது மக்களில் தலா ஒருவருக்கு 126 கிராம் மட்டுமே பால் கிடைத்தது. அந்தளவு பாலுக்கு தட்டுப்பாடு இருந்தது. சில மாநிலங்களில் ஒருவருக்கு 30 முதல் 50 கிராம் பால் மட்டுமே குடிக்க கிடைத்தது. அப்போது இந்திய அரசு பால் தட்டுப்பாட்டை எப்படி போக்கியது? இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர்களைத்தான் அப்போது அரசு நம்பியது. 

இந்த சம்பவங்கள் நடைபெற்ற காலகட்டம் 1952-55 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இதுபற்றி மாநிலங்கள் அவையில் விவாதங்கள் வெடித்தன. 

மேற்கு வங்கத்தில் பால் பவுடர் சப்ளை ஆனது, மிகவும் குறைந்துவிட்டது. குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் அடுத்தமாதமே தருவதற்கு பால் பவுடர் இல்லை என்று புகார் கூறினார் நிரன் கோஷ். 

இதற்கு பதில் அளித்தார் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் எஸ் சந்திரசேகர்..,,,

எனக்கு தெரியும் சார்...பீகாரில் பஞ்சம் காரணமாக பால் பவுடர் சப்ளையில் பெரும்பகுதியை அங்கு அனுப்பியிருக்கிறோம். அங்கு வழங்கப்பட்டிருப்பதும் குறைந்த அளவு பொருட்கள்தான். குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் சிறுவர்களுக்கு மட்டும் பால் பவுடரை வழங்கியுள்ளோம் என்றார். 

மாநிலங்கள் முழுக்க தட்டுப்பாடு நிலவியதால், மாநில அரசுகளும், மத்திய அரசும் பாலை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்கவில்லை. பால் பொருட்களில் தயாரித்த இனிப்புகளை ஆடம்பர பொருள் என்றே விவசாயத்துறை அமைச்சர் அன்னாசாகேப் ஷிண்டே கூறினார். 

தொண்ணூறுகளில் இந்தியாவில் பால் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அதன்பிறகுதான், விவசாயத்துறை அமைச்சர் லென்கா, இனி பாலை பால் பவுடர் ஆக்கவும்  கண்டென்ஸ்டு பால் ஆக்கவும் தடை நீடிக்கிறது என்று அறிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு பலருக்கும் அன்றிருந்த பால் தட்டுப்பாடு தெரியாது. 

டைம்ஸ் ஆப் இந்தியா 

அபிலாஸ் கௌர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?