சீக்கியர்களை கொன்ற சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்தேன்! - எழுத்தாளர் எம் முகுந்தன்
எழுத்தாளர் எம்.முகுந்தன்
நேர்காணல்
எம்.முகுந்தன்
டைம்ஸ் ஆப் இந்தியா
கே பி சாய் கிரண்
பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்ற டெல்லி வந்தவர், அந்த நகரைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி எ சாலோக்யூ என்ற நூலை எழுதி நடப்பு ஆண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதை வென்றுள்ளார்.
நீங்கள் டெல்லி பற்றி டெல்லி, டெல்லி 1981, டெல்லி என சாலிக்யூ என்ற நூல்களை எழுதியுள்ளீர்கள். நீங்கள் வெளியிலிருந்து வந்து டெல்லியில் குடியேறி வெகு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறீர்கள். உங்கள் பார்வையில் டெல்லியைப் பற்றிய கருத்து என்ன?
அறுபதுகளில் நான் டெல்லிக்கு வந்துவிட்டேன். அடுத்த நாற்பது ஆண்டுகளில் நகரம் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது. இதனை நான் வெளிப்புற தன்மையில் மட்டும் கூறவில்லை. கலாசாரம் சார்ந்தும் பேசுகிறேன். அன்றைய காலத்தில் நகரமாக இருப்பதை விட பல்வேறு கிராமங்களின் இணைப்பு புள்ளியாகவே நகரம் இருந்தது. முபாரக்பூரில் கோதுமையும் காலிப்ளவரும் ஏராளமாக விளைந்து வந்த்து. எருமைகளும் இங்கே சாலைகளில் ஏராளமாக உலவி வரும். இப்போது டெல்லியில் வன்முறையும் குற்றங்களும் அதிகரித்து விட்டன. இங்கு வாழும் சிறுபான்மையினரும், ஏழைமக்களும் பிழைப்பதற்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காக யாரும் பேசுவதில்லை. எனது படைப்புகளை இவர்களுக்காக நான் அர்ப்பணிக்கிறேன்.
உங்களது நூல்களை ்பாத்திமா இ வி, நந்தகுமார் ஆகியோர் சரியாக மொழிபெயர்த்துள்ளதாக நினைக்கிறீர்களா?
மொழிபெயர்ப்பு சரியாக இருப்பதாகவே நினைக்கிறேன். எப்படி திரைப்படங்களின் காட்சிகளுக்கு பின்னணி இசை சரியான தன்மையை ஏற்படுத்துகிறதோ அப்படித்தான் மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும். நாவலின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பாளர்கள் எழுதியுள்ளதாக கருதுகிறேன்.
தற்போது பரிசு பெற்ற நாவலில் இந்திராகாந்தி இறந்தபிறகு சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவசரநிலை ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்?
இந்த நாவல், இந்திய சீனா போர் பற்றிய விஷயங்கள் மற்றும் கூடுதலாக இந்திராகாந்தி கொலை ஆகியவற்றையும் பேசுகிறது. நாவலில் வரும் பல்வேறு சம்பவங்களுக்கு நானே நேரடியான சாட்சியாக இருந்துள்ளேன். சீக்கியர்களை தேடி வேட்டையாடும் கும்பல், எனது வீட்டுக்கும் கூட வந்துள்ளனர். அப்போது எனது பக்கத்து வீட்டில் சீக்கியர் குடும்பம் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு பதினான்கு வயதில் பள்ளி செல்லும் பெண் ஒருவள் இருந்தாள். அவளை கும்பலிடம் சிக்காமல் இந்து குடும்பம் பாதுகாத்தது. அவளை நாவலில் பாத்திரமாக வைத்துள்ளேன். வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சாக்கடையில் வீசப்பட்டன. இப்படி கிடந்த பிணங்களை நேரடியாகவே நான் பார்த்துள்ளேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக