ஆதரவற்ற பெண்களை கருமுட்டைக்காக கடத்தும் மாபியாவை வேட்டையாடும் இரு பெண்கள்! - சாகினி தாகினி - சுதீர் வர்மா













 சாகினி தாகினி 
ரீமேக் - மிட்நைட் ரன்னர்ஸ் 
சுதீர் வர்மா
ரெஜினா, நிவேதா தாமஸ் 


கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸ் படத்தை ரீமேக் செய்து மாற்றி எடுத்து இருக்கிறார்கள். படத்தை தமிழில் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. டப் படம் என்றால் படம் உள்ள பகுதி சார்ந்தே பெயரை சொல்லி படத்தை தமிழ் செய்தால் என்ன கெட்டுவிடப்போகிறது.... தெலுங்கானவை எப்படி மதுரை ஆக்க முடியும்.. 


போலீஸ் அகாடமிக்கு இருவர் தேர்வாகி வருகிறார்கள். ஷாலினி, தாமினி. இவர்கள்தான் சாகினி, தாகினி என்ற இரு பாத்திரங்கள். இருவரும்  தொடக்கத்திலேயே முட்டி மோதி பிறகு நடைபெறும் சம்பவத்தால் நண்பர்களாகிறார்கள். நட்பு என்றால்,  ஒருவர் கண் அசைத்தால் இன்னொருவர் அப்படியே செய்து முடிக்கும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள். ஒருமுறை பப்பில் மது அருந்திவிட்டு சாலையில் வரும்போது திடீரென பைக்கில் வேகமாக இளைஞர்கள் வர அவர்களை இளம்பெண் ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவளை திடீரென வேன் ஒன்றில் பிடித்து செல்கிறார்கள். அதைப் பார்த்து ஷாலினி, தாமினி என இருவரும் அவளை பின் தொடர்கிறார்கள். அதில், அவளை தூக்கிச்சென்றவர்கள் எப்படிப்பட்ட குற்றவாளிகள் என தெரிகிறது. இந்த நேரத்தில் அவர்களை அகாடமி தலைவர், பயிற்சி மையத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் இவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் குற்றவாளி கூட்டத்தை பிடிக்க செல்கிறார்கள். அவர்களால் அந்த இளம்பெண்ணை காப்பாற்ற முடிந்ததா, இல்லையா என்பதே இறுதிக்காட்சி. 


படத்தில் காமெடிக்கு நிவேதா தாமஸ், பிரித்விராஜ் பொறுப்பேற்கிறார்கள். புத்திசாலித்தனம், சண்டைக்காட்சிக்கு ரெஜினா பொறுப்பு. சண்டைகளை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் இறுதிக்காட்சியில் இன்னும் நேர்த்தி வந்திருக்க வேண்டும். கந்த சஷ்டி கவசத்தைப் போட்டு ஒருவழியாக முடித்திருக்கிறார்கள். 


குற்றவாளி எப்படி ஆர்கனைஸ்டு குற்றங்களை செய்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு சுதீர் வர்மா காட்சிபடுத்தியிருக்கிறார். ஆனால் முழு விவரங்கள் அதில் இல்லை. தெலுங்கில் எந்த பகுதி என்று தெரியவில்லை. தமிழ் டப்பில், பெசன்ட் நகரில் போலீஸ் அகாடமி உள்ளது. குற்றங்கள் நடைபெறும் பகுதி சைதாப்பேட்டையாக உள்ளது. சோதனைக்குழாய் குழந்தை, வாடகைத்தாய் முறை சார்ந்து நடைபெறும் குற்றங்களை இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். 


சாமி பாட்டு போட்டு சண்டை


கோமாளிமேடை டீம் 

midnight runners movie trailer

https://www.youtube.com/watch?v=cyVk51ksx4o









கருத்துகள்