பொங்கல் மலருக்கான எடிட்டிங் ஜரூர்!
பொங்கல் மலருக்கு வேலை செய்வது என்றால், என்னைப் பொறுத்தவரை கட்டுரை எழுதுவதுதான். ஆனால், சண்முகம் சார் வேலைப்பளுவினாலா அல்லது வேறு சிக்கலாலா என்று தெரியவில்லை. என்னை ராவான கட்டுரைகளை படித்து பார்த்து செம்மை செய்யச் சொன்னார். ஆனால் மறுக்கும் நிலையில் இல்லை. கட்டுரைகளை ஃபோல்டரில் போட்டுக்கொண்டே இருந்தார் சண்முகம் சார். நான் அவற்றை திருத்தி தலைப்புகளை மாற்றினேன்.
பெரும்பாலான தினசரி செய்தியாளர்களுக்கு செய்தி எழுதுவது தெரியும். ஆனால் பொங்கல், தீபாவளி மேட்டருக்கான ஐடியாக்களைக் கொடுத்து அதை செவ்வனே எழுதுவது என்றால் எழுதிவிடுவார்கள். ஆனால் அதில் எது முக்கியமோ அதை முன்னிலைப்படுத்தி எழுத வராது. அனைத்தையுமே எழுதியிருப்பார்கள். அதில் நாம் எது முக்கியமோ அதை சற்று முக்கியப்படுத்தி எடுத்து சற்று மாற்றியமைக்க வேண்டும். அப்படித்தான் நான் புரிந்துகொண்டு எழுதினேன். நன்றாக செய்தேனா என்று தெரியவில்லை. ஆனால் சண்முகம் சார் புகார் ஏதும் சொல்லவில்லை. ''நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரவ் டிராஃப்ட் போல வரும் அதை சற்று திருத்தி எழுதிக்கொடுங்கள்'’ என்றார். முடிந்தவரை அவர் சொன்ன விதிகளை மனதில் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்.
அதற்கு வேலை செய்ததற்கு பணம் தனியாக ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் என பேராச்சி சொன்னார். அதாவது கட்டுரை எழுதினால் மட்டும். செம்மை செய்து தந்ததற்கு என்ன கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எடிட்டர் சண்முகம் , ரூ.4000 கொடுத்தார். அதை வாடகைக்கு உதவும் என நினைத்துக்கொண்டேன். எனக்கும் தேவைகள் உள்ளன அல்லவா?
கருத்துகள்
கருத்துரையிடுக